அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபி ரேஃபிள் டிராவில் அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த நபர் 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார். அபுதாபியில் வசிக்கும் துஷார் தேஷ்கர், கடந்த ஜூலை 31 அன்று வாங்கிய 334240 என்ற எண் கொண்ட டிக்கெட்டானது அவருக்கு இந்த அதிர்ஷ்டத்தை தந்துள்ளது.
அவர் டிராவை நேரலையில் பார்க்கவில்லை என்பதால், நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிச்சர்ட் வெற்றி பெற்ற துஷாரை தொடர்பு கொண்ட போது இது உண்மைதானா என்று நம்ப முடியாமல் பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் “இந்த 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையானது நான்கு பேருக்குப் பகிரப்படும். நான் இதை மற்ற மூன்று நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஒரு வருடமாகபிக் டிக்கெட் வாங்கி வருகிறேன். ஆனாலும் இப்படி ஒரு பெரிய பரிசை வெல்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வெற்றி பெற்ற தொகை குறித்து கூறுகையில் “நான் கிடைக்கும் பரிசுத்தொகையை வைத்து எனது கடனில் சிலவற்றை திருப்பிச் செலுத்துவேன். அத்துடன் இந்த பணத்தில் என் குடும்பத்தை கவனித்துக்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாதம், பிக் டிக்கெட்டில் மீண்டும் 15 மில்லியன் திர்ஹம் பெரும் பரிசை வழங்கப்படவிருப்பதாக பிக் டிக்கெட்டின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. அத்துடன் ரொக்கப் பரிசுக்கான டிக்கெட்டுகளை வாங்கும் எவரும், எலக்ட்ரானிக் டிராவில் நுழைவார்கள் என்றும், டிக்கெட் வாங்கிய மறுநாளே டிராவில் பங்கேற்கலாம் என்றும் வெற்றி பெறும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 50,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது 50,000 திர்ஹம்ஸிற்கான டிராவானது தினசரி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் நேரடி டிராவின் போது 10 பங்கேற்பாளர்கள் தலா 100,000 திர்ஹம்ஸ் மற்றும் 325,000 மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் வேலரை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. ஒரு டிரீம் கார் டிக்கெட்டின் விலை 150 திர்ஹம்ஸ் ஆகும், மேலும் ரொக்கப் பரிசைப் போலவே, இரண்டு டிக்கெட்டுகளை வாங்கும் எவரும் ஒரு டிக்கெட்டை இலவசமாகப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிக் டிக்கெட்டில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டை www.bigticket.ae மூலம் ஆன்லைனில் டிக்கெட் வாங்கலாம் அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள பிரத்யேக கவுண்டர்களைப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel