ADVERTISEMENT

அடுத்த மாதம் 15வது ஆண்டை நிறைவு செய்யவுள்ள துபாய் மெட்ரோ..!! சிறப்பு கொண்டாட்டங்களை அறிவித்த RTA..!!

Published: 25 Aug 2024, 7:45 PM |
Updated: 25 Aug 2024, 7:45 PM |
Posted By: admin

மெட்ரோ என்பது துபாயின் பொதுப் போக்குவரத்துக்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும். ஓட்டுநர் இல்லாத இந்த ரயில் முதன்முதலில் செப்டம்பர் 9, 2009 அன்று (09/09/09) முதன் முதலாக துபாயில் இயக்கப்பட்டது. இந்த துபாய் மெட்ரோ துவங்கி 15 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக, குடியிருப்பாளர்கள் சிறப்பு நிகழ்வுகள், தள்ளுபடி செய்யப்பட்ட நோல் கார்டுகள் மற்றும் பல சிறப்பம்சங்களை பயணிகள் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“15 years on track” என்ற கருப்பொருளின் கீழ், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) உலகம் முழுவதிலுமிருந்து குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள், ஆச்சரியங்கள் மற்றும் முன்முயற்சிகளுடன் இந்த நிகழ்வைக் கொண்டாடும் என கூறப்பட்டுள்ளது.

மெட்ரோவின் 15வது ஆண்டு விழாவில் இடம்பெறுபவை

>> எமிரேட்ஸ் போஸ்ட்டால் வெளியிடப்பட்ட வரையறுக்கப்பட்ட பதிப்பு அஞ்சல் முத்திரைகள்.  

>> லெகோ மத்திய கிழக்கு (Lego Middle East) மற்றும் 15வது ஆண்டு பிரச்சார லோகோவின் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட சிறப்பு பதிப்பு Nol கார்டு

ADVERTISEMENT

>> அல் ஜாபர் கேலரியின் மெட்ரோ தொடர்பான நினைவுப் பொருட்கள்.

>> செப்டம்பர் 21, 2024 அன்று லெகோலாண்ட் துபாய் நடத்தவிருக்கும் கொண்டாட்டம். இந்த நிகழ்வு செப்டம்பர் 9 அன்று பிறந்த குழந்தைகளுக்கானது (2009 முதல் 2023 வரை). இதில் பங்கேற்க RTA இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்

ADVERTISEMENT

>> லிமிடெட் எடிஷன் மெட்ரோ வடிவ இக்லூ ஐஸ்கிரீம் (igloo) விற்பனை செய்யப்படும். இந்த ஐஸ்கிரீம்களில் 5,000 குச்சிகளில் ஒரு சிறப்புக் குறியீடு இருக்கும், அது 5,000 Nol Terhaal தள்ளுபடி அட்டைகளில் 1ஐ வெல்வதாகக் காட்டப்படும்.

>> பிராண்ட் துபாய் ஏற்பாடு செய்த 4வது துபாய் மெட்ரோ இசை விழாவின் ஒரு பகுதியாக செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் எமிராட்டி மற்றும் சர்வதேச இசைக்கலைஞர்களால் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel