துபாய் மெட்ரோ இயங்கும் நேரம் நாளை (நவம்பர் 24, 2024 ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் நாளை அதிகாலை 3.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது துபாய் ரன்னில் பங்கேற்கும் நபர்களுக்காக வேண்டி பிரத்யேகமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மெட்ரோவில் பயணிப்பவர்கள் சுற்றுப் பயணங்களுக்கு தேவையான நோல் பேலன்ஸை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி சில்வர் கார்டுக்கு குறைந்தபட்சம் 15 திர்ஹம்ஸூம், நோல் கோல்டு கார்டுக்கு 30 திர்ஹமும் என தங்கள் நோல் பேலன்ஸை சரிபார்க்கவும் ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் மாபெரும் உடற்பயிற்சி நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரன் நவம்பர் 24 அன்று துபாயின் புகழ்பெற்ற ஷேக் சையத் சாலையில் தொடங்க உள்ளது. ஒரு மாத கால உடற்தகுதி சவாலின் இறுதிப் போட்டியான துபாய் ரன்னில் இலட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பதைக் காணலாம்.
இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்களுக்கு இரண்டு பாதை விருப்பங்கள் உள்ளன. ஒன்று ஆரம்ப மற்றும் குடும்பங்களுக்கான 5 கிமீ பாதை, மற்றொன்று அனுபவமுள்ள ஓட்டப்பந்தய வீரர்களுக்கான மிகவும் சவாலான 10 கிமீ பாதை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel