துபாய், அபுதாபி இடையே மலிவான விலையில் பயணிக்க 3 வழிகள்.. முழுவிபரங்களும் உள்ளே…
நீங்கள் அடிக்கடி துபாய்-அபுதாபி இடையே பயணம் செய்பவரா? உங்களிடம் கார் அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லை என்ற நிலையில், துபாயிலிருந்து அபுதாபிக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் வசதியான மற்றும் மலிவு பொது போக்குவரத்து விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். இதற்கான அனைத்து வழிகளும் உங்களுக்காக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
1. RTA இன் புதிய டாக்ஸி பகிர்வு சேவை
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள இரு எமிரேட்களான துபாய் மற்றும் அபுதாபி இடையே புதிய ஷேரிங் டாக்ஸி என்றழைக்கப்படும் டாக்ஸி பகிர்வு (sharing taxi) சேவையை தொடங்கியுள்ளது. இது இரண்டு எமிரேட்டுகளுக்கு இடையே பயணிக்க வழக்கமாக ஆகும் செலவை விட 75 சதவீதம் மலிவானது. ஒரு வழக்கமான பயணத்திற்கு உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து சுமார் 300 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவாகும், ஆனால் இந்த புதிய பகிர்வு சேவைக் கட்டணங்கள் 66 திர்ஹம்ஸில் இருந்து தொடங்கும்.
இடம்
தற்போது, டாக்ஸி பகிர்வு சேவை துபாயில் உள்ள இபின் பதூதா சென்டருக்கும் அபுதாபியில் உள்ள அல் வஹ்தா சென்டருக்கும் இடையே இயக்கப்படுகிறது. மேலும் ஆறு மாதங்களுக்கு சோதனை கட்டம் நடத்தப்படும் மற்றும் அதன் விளைவுகளின் அடிப்படையில், இது மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்று RTA தெரிவித்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeசெலவு
- 66 திர்ஹம்ஸ் – நான்கு பயணிகள் ஒரு டாக்ஸியைப் பகிர்ந்து கொள்ளும்போது.
- 88 திர்ஹம்ஸ் – மூன்று பயணிகள் ஒரு டாக்ஸியில் பயணிக்கும்போது.
- 132 திர்ஹம்ஸ் – இரண்டு பயணிகள் ஒரு டாக்ஸியில் பயணிக்கும் போது
2. இன்டர்சிட்டி பஸ் சேவைகள்
நீங்கள் அபுதாபி சென்ட்ரல் பஸ் நிலையத்திற்கோ அல்லது அல் அய்ன் நகரத்திற்கோ பயணிக்க விரும்பினால், இன்டர்சிட்டி பேருந்துகளில் இன்னும் மலிவு விலையில் பயணிக்க முடியும். RTA பின்வரும் வழித்தடங்கள் உட்பட அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான நகரங்களுக்கு இடையேயான பேருந்து நெட்வொர்க்கை இயக்குகிறது:
- E100: அல் குபைபா பஸ் நிலையம் – அபுதாபி சென்ட்ரல் பஸ் நிலையம்
- E101: இபின் பதூதா பஸ் நிலையம் – அபுதாபி சென்ட்ரல் பஸ் நிலையம்
- E102: அல் ஜாஃபிலியா – சையத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட். இந்த பேருந்துப் பாதை வார இறுதி நாட்களில் முசாஃபா பஸ் நிலையத்திலிருந்தும் புறப்படும்.
- E201: அல் குபைபா – அல் அய்ன் பஸ் நிலையம்
செலவு
நீங்கள் பயணிக்கும் பேருந்து வழித்தடத்தைப் பொறுத்து, 25 முதல் 30 திர்ஹம்ஸ் வரை செலவாகும். பஸ் பயணத்திற்கு நீங்கள் நோல் கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும். மேலும், RTA இணையதளம் – rta.ae மூலம் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யவும்
நேரங்கள்
துபாயில் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படுகின்றன. துல்லியமான நேரங்களுக்கு, RTA இன் ஜர்னி பிளானர் அல்லது S’hail அப்ளிகேஷன் பயன்படுத்தவும், இது வழி விவரங்கள், அட்டவணைகள் மற்றும் கட்டண மதிப்பீடுகளைக் காட்டும்.
3. சையத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
நீங்கள் அபுதாபியிலிருந்து ஒரு விமானத்தை முன்பதிவு செய்திருந்தால், விமான நிலையத்தின் வசதியான 24/7 ஷட்டில் பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எக்ஸ்பிரஸ் பஸ் சேவையானது துபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் சையத் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் எந்த நிறுத்தமும் இல்லாமல் செல்கிறது.
ஷட்டில் பேருந்துகளை எங்கே பிடிக்கலாம்?
இப்னு பட்டுடா பஸ் நிலையத்திலிருந்து இபின் பட்டுடா மெட்ரோ நிலையம் (ரெட் லைன்) மற்றும் இபின் பட்டுடா மால் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் பேருந்து புறப்படுகிறது. இந்த ஷட்டில் பஸ் சையத் சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பிரிவில் பயணிகளை இறக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட்டுகள்
சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இப்ன் பட்டுடா பஸ் நிலையத்திற்கு இடையேயான ஷட்டில் சேவைகளுக்கான டிக்கெட்டுகள் விமான நிலையத்தில் உள்ள அரைவல் ஹால் மற்றும் இப்ன் பட்டுடா பஸ் நிலையத்திலும் வாங்குவதற்கு கிடைக்கின்றன.
செலவு – ஒரு நபருக்கு 35 திர்ஹம் (ஒரு வழி டிக்கெட்)
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel