அமீரக செய்திகள்

துபாயில் வாட்டர் டாக்ஸி, துபாய் ஃபெர்ரி மற்றும் அப்ரா சேவையை அணுகுவது எப்படி? டிக்கெட் கட்டணம் உட்பட முழுவிபரங்களும் இங்கே…

துபாயின் சாலைகள் மில்லியன் கணக்கான தனிப்பட்ட கார்கள் மற்றும் சில உயர்மட்ட சொகுசு வாகனங்களுடன் பரபரப்பாக காணப்பட்டாலும், எமிரேட் ஒரு சிறந்த மற்றும் திறமையான பொது போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. துபாயில் டாக்ஸிகள் தவிர, துபாய்க்குள்ளும் மற்றும் மற்ற அனைத்து எமிரேட்டுகளுக்கும் சேவை செய்வதற்கு சிறந்த பேருந்து நெட்வொர்க் உள்ளது, அதே போல், நேர துல்லியத்துடன் செயல்படும் மெட்ரோவும் உள்ளது. மேலும் சில பகுதிகள் டிராம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த வெவ்வேறு போக்குவரத்து முறைகள் வருவதற்கு முன்பு, துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அதன் கடல் வணிகத்திற்கு பெயர் பெற்றிருந்தது. நாட்டின் போக்குவரத்து முறைகளில் விரைவான முன்னேற்றம் இருந்தபோதிலும், ஐக்கிய அரபு அமீரகம் அதன் பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. அதாவது அமீரகம் அதன் பாரம்பரிய அப்ரா போக்குவரத்து முறையை இன்றும் கடைபிடித்து வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் பேருந்துகள், மெட்ரோ மற்றும் டிராம் என சாலைப் போக்குவரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுடன், துபாய் திறமையான கடல் போக்குவரத்து அமைப்பையும் கொண்டுள்ளது. துபாயில் வாட்டர் டாக்ஸி, ஃபெர்ரி மற்றும் அப்ரா (abra) போன்ற பல்வேறு கடல் போக்குவரத்து இயங்குகின்றது. இதன் மூலம் நீங்கள் எவ்வாறு பயணிக்கலாம் என்பதற்கான முழு வழிகாட்டி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்

  • கடல்வழி பயணத்திற்கு உங்களுக்கு கப்பல் டிக்கெட் அல்லது குறைந்தபட்ச இருப்புடன் கூடிய நோல் கார்டு தேவை
  • நீங்கள் துபாய் மெரினா பகுதியில் பயணிக்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நாள் பாஸ் தேவைப்படும்

கட்டணங்கள்

டிக்கெட் கட்டணங்கள் நீங்கள் பயணிக்கும்  வழியைப் பொறுத்து மாறுபடும் மற்றும் ஒரு நபருக்கு 1 திர்ஹம் முதல் 75 திர்ஹம்ஸ் வரை இருக்கும்

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

  • நீங்கள் மரைன் ஸ்டேஷனில் (marine station) வரிசைகளில் நிற்பதை தவிர்க்க விரும்பினால், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தை (https://marine.rta.ae/rta_b2c/opentickets.html) அணுகுவதன் மூலம் உங்கள் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
  • நீங்கள் செல்ல வேண்டிய பகுதி, போக்குவரத்து முறை மற்றும் வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின்னர், டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை நீங்கள் தேர்வு செய்யவும்
  • அதைத் தொடர்ந்து, உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சேர்க்க வேண்டும், பின்னர் கிடைக்கும் ஆன்லைன் கட்டண விருப்பங்கள் மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்
  • அதன்பிறகு, வழங்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் உங்கள் டிக்கெட்களை நீங்கள் பெறுவீர்கள்
  • நீங்கள் ஏறும் முன் மற்றும் இறங்கும் போது டிக்கெட்டைக் காட்டி, அதை சரிபார்க்கலாம்

மரைன் ஸ்டேஷனில்  டிக்கெட் பெறுவது எப்படி?

  • ஆன்லைன் மட்டுமின்றி, நீங்கள் மரைன் ஸ்டேஷனிலும் டிக்கெட் வாங்கலாம் அல்லது உங்கள் நோல் கார்டையும் பயன்படுத்தலாம்
  • பின்னர் நீங்கள் டிக்கெட்டை வேலிடேட் செய்யலாம் அல்லது போர்டிங் மற்றும் டிபோர்டிங் செய்யும் போது வேலிடேட்டரில் உங்கள் நோல் கார்டைத் தட்டலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை

  • டிக்கெட் கட்டணம் திரும்பப் பெறப்படாது
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (PoD) கடல் போக்குவரத்தில் பயணம் இலவசம்
  • கப்பல்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக நியமிக்கப்பட்ட இருக்கைகள் உள்ளன
  • அப்ராவைப் பயன்படுத்தத் திட்டமிடும் மாற்றுத் திறனாளி மக்கள் (PoD) இலவச சக்கர நாற்காலியை அணுகலாம். அப்ராவில் ஏறுவதற்கு முன் அவர்கள் தங்கள் PoD கார்டை வாடிக்கையாளர் சேவை நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு பயணத்திற்கு ஒரு சக்கர நாற்காலி மட்டுமே இடமளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
  • 2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு துபாய் ஃபெர்ரி பயணக் கட்டணத்தில் 50% தள்ளுபடி கிடைக்கும். ஆனால் பயணச்சீட்டுகளை கடல்சார் நிலையங்களில் மட்டுமே வாங்க முடியும்
  • 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அப்ரா (TR6) மற்றும் துபாய் ஃபெர்ரிகளில் (FR4) சுற்றுப்பயணங்களில் இலவசமாகப் பயணிக்கலாம். கடல்சார் நிலையங்களில் மட்டுமே டிக்கெட் வாங்க முடியும்
  • 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களுடன் இருக்க வேண்டும். பெரியவர்கள், குடியிருப்பாளராக இருந்தால், குழந்தையின் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியை அல்லது சுற்றுலாப் பயணியாக இருந்தால் குழந்தையின் பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும். அடையாளச் சான்று கடல் நிலையங்களில் உள்ள டிக்கெட் மற்றும் தகவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • பெரியவர்களுடன் வரும் குழந்தைகள் பயணத்தின் போது லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும்
  • துபாய் அப்ரா மற்றும் துபாய் வாட்டர் டாக்ஸியில் பயணிக்கத் திட்டமிடும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும், துபாய் ஃபெர்ரியில் பயணம் செய்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் மரைன் ஸ்டேஷனுக்கு வர வேண்டும்.
  • பாதைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் வானிலை காரணமாக அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக பயணம் ரத்து செய்யப்படலாம்
  • விதிமீறல்கள் மற்றும் அபராதங்களின் பட்டியலின் படி தவறான நடத்தை ஏற்பட்டால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம்
  • பெரும்பாலான கடல் நிலையங்கள் நோல், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்றுக்கொள்கின்றன, ஆனால் சில நிலையங்களில் இந்த விருப்பங்கள் இல்லாததால் பணத்தை கையில் எடுத்துச் செல்வது நல்லது.

வழிகள் மற்றும் கட்டணங்கள்

வாட்டர் டாக்ஸி

மெரினா மால் – மெரினா வாக் (BM1)

  • 7 திர்ஹம்ஸ்
  • ஒரு நாள் பாஸ்: 25 திர்ஹம்ஸ்

மெரினா ப்ரோமனேட் — மெரினா மால் 1 — மெரினா வாக் — மெரினா டெரஸ் (BM1)

  • 7 திர்ஹம்ஸ்—21 திர்ஹம்ஸ் வரை(நிறுத்தங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து)
  • ஒரு நாள் பாஸ்: 25 திர்ஹம்ஸ்

மெரினா மால் – புளூவாட்டர்ஸ் (BM3)

  • 7 திர்ஹம்ஸ்
  • ஒரு நாள் பாஸ்: 25 திர்ஹம்ஸ்

*குறிப்பு: ஒரு நாள் பாஸ், பயணிகளை பல ஹாப்-ஆன் மற்றும் ஹாப்-ஆஃப் சவாரிகளுக்கு அனுமதிக்கிறது

துபாய் ஃபெர்ரி

அல் குபைபா – துபாய்கேனல் ஸ்டேஷன் (FR1)

  • 25 திர்ஹம்ஸ்- சில்வர் (ஒரு வழி)
  • 35 திர்ஹம்ஸ்- கோல்டு (ஒரு வழி)
  • 0-5 வயது குழந்தைகளுக்கு இலவசம்

துபாய் கேனல்- புளூவாட்டர்ஸ் – மெரினா மால் (FR2)

  • 25 திர்ஹம்ஸ்- சில்வர் (ஒரு வழி)
  • 35 திர்ஹம்ஸ்- கோல்டு (ஒரு வழி)
  •  0 – 5 வயது  குழந்தைகள்- இலவசம்

துபாய் மெரினா மால் ஸ்டேஷன் — பாம் ஜுமேரா — அட்லாண்டிஸ் தி பாம் (சுற்றுப் பயணம்) (FR4)

  • சில்வர் கிளாஸ்: ஒரு நபருக்கு 50 திர்ஹம்ஸ்
  • ஒரு குடும்பப் பேக்கேஜ்  140 திர்ஹம்ஸ் (2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள்)

*குறிப்பு: 2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் ஒற்றை டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறுகிறார்கள், அதே நேரத்தில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக சவாரி செய்கிறார்கள்.

அல் குபைபா – ஷார்ஜா அக்வாரியம் (FR5)

  • 15 திர்ஹம்ஸ்- பெரியவர் (சில்வர்) ஒரு வழி
  • 25 திர்ஹம்ஸ்- பெரியவர் (கோல்டு) ஒரு வழி
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இலவசம்

அல் ஜடாஃப் – DFC – க்ரீக் ஹார்பர் (டிஆர்7)

  • ஒரு நபருக்கு 10 திர்ஹம்ஸ்
  • 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசம்

அப்ரா
பாரம்பரிய அப்ரா (பெட்ரோல்)

துபாய் ஓல்ட் சூக் – பனியாஸ் (CR3)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் சப்கா – அல் ஃபாஹிதி (CR4)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் ஃபஹாதி – தேரா ஓல்ட் சூக் (CR5)

ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் சீஃப் – பனியாஸ் (CR6)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் சீஃப் – அல் ஃபாஹிதி – துபாய் ஓல்ட் சூக் (CR7)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

துபாய் பெஸ்டிவல் சிட்டி – துபாய் க்ரீக் துறைமுகம் (CR9)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு Dh2 திர்ஹம்ஸ்

அல் ஜடாஃப் – துபாய் க்ரீக் துறைமுகம் (CR11)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் ஜடாஃப் மரைன் ஸ்டேஷன் முதல் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி வரை (BM2)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் ஜடாஃப் மரைன் ஸ்டேஷன் முதல் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி வரை (BM2)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் வஜேஹா – அல் மராசி – பிசினஸ் பே (DC2)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் வஜேஹா – அல் மாயா – மராசி – பிசினஸ் பே – கோடோல்பின் – ஷேக் சையத் சாலை (DC2)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

அல் ஜடாஃப், துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட் (DC3)

  • ஒரு நபருக்கு/ஒரு திசையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ்

ஷேக் சையத் சாலை (சுற்றுப் பயணம்) (TR6)

ஒரு பயணத்திற்கு/நபருக்கு 25 திர்ஹம் (2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்)

பாரம்பரிய அப்ரா (மின்சாரம்)

துபாய் மால்/புர்ஜ் பிளாசா/பேலஸ்

  • 25 நிமிடங்களுக்கு ஒரு நபருக்கு 68.25 திர்ஹம்கள்

குளோபல் வில்லேஜ்

  • 12 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு பயணத்திற்கு முழு அப்ராவையும் முன்பதிவு செய்ய 52.5 திர்ஹம்ஸ்

அல் ஃபாஹிதி/பனியாஸ்/அல் சீஃப் (சுற்றுப்பயணம்) (TR10)

  • 30 நிமிடங்களுக்கு 60 திர்ஹம்ஸ்
  • 1 மணிநேரத்திற்கு 120 திர்ஹம்ஸ்

பாரம்பரிய அப்ரா (மோட்டார்)

பர் துபாய் அப்ரா நிலையம் – தேரா ஓல்ட் சூக் அப்ரா நிலையம் (CR1)

  • ஒரு பயணிக்கு/ஒரு பயணத்திற்கு 1 திர்ஹம்ஸ்(பணம் மட்டும்)

துபாய் ஓல்ட் சூக் அப்ரா நிலையம் – அல் சப்கா அப்ரா நிலையம் (CR2)

  • ஒரு பயணிக்கு/ஒரு பயணத்திற்கு 1 திர்ஹம்ஸ்(பணம் மட்டும்)

குறிப்பு: வழிகள் மற்றும் கட்டணங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஏதேனும் புதுப்பிப்புகளுக்கு RTA இணையதளத்தைப் பார்க்கவும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!