போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக தண்டனைகளை கடுமையாக்கும் அமீரக அரசு..!! விரைவில் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரகமானது சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்துச் சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. புதிய திருத்தப்பட்ட போக்குவரத்துச் சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மது மற்றும் சைக்கோட்ரோபிக் (psychotropic) அல்லது போதைப் பொருள்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகளும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்த 2024 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்டம் எண். 14-ன் படி, மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம்
ஆர்ட்டிகிள் 35 இன் பிரிவு (1) இல், குடிபோதையில் சாலையில் வாகனம் ஓட்டுபவர் அல்லது வாகனத்தை ஓட்ட முயற்சிப்பவருக்கு சிறைத்தண்டனை மற்றும் 20,000 முதல் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஒன்று விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் ரத்து
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் சிறைத்தண்டனை மற்றும் போக்குவரத்து அபராதம் மட்டுமல்ல, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்:
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe- முதல் முறை செய்யப்படும் குற்றம் – குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு உரிமம் இடைநீக்கம் செய்யப்படும்.
- இரண்டாவது முறை- ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம்.
- மூன்றாவது முறை – உரிமம் ரத்து செய்யப்படும்.
போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம்
அதே கட்டுரையின் பிரிவு (2) குறிப்பாக போதைப்பொருள் அல்லது சைக்கோட்ரோபிக் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை எடுத்துக்காட்டுகிறது. அதன்படி, போதைப்பொருள் அல்லது சைக்கோட்ரோபிக் பொருட்கள் அல்லது அதுபோன்ற பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டும் அல்லது சாலையில் வாகனம் ஓட்ட முயற்சிக்கும் எவருக்கும் சிறைத்தண்டனை மற்றும் 30,000 முதல் 200,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்
- முதல் முறை இந்த விதியினை மீறுபவர்களின் உரிமம் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும்.
- இரண்டாவது முறை என்றால், ஒரு வருடத்திற்கு உரிமம் இடைநீக்கம் செய்யப்படும்.
- மூன்றாவது முறை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்..
ரத்து செய்யப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும்?
புதிய போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 36ன் படி, ரத்து செய்யப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 திர்ஹம் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஒன்று விதிக்கப்படும்.
மரண விபத்துக்கள்
போக்குவரத்து சட்டத்தின் 40 வது பிரிவின்படி, ஒரு வாகன ஓட்டி ஒருவர் போதையில் அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் விளைவாக ஒரு நபரின் மரணத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டால், அவர் 100,000 திர்ஹம்ஸிற்கு குறையாத அபராதம் மற்றும்/அல்லது ஒரு வருடத்திற்கு குறையாத காலத்திற்கு சிறைத் தண்டனையை அனுபவிப்பார் என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel