ADVERTISEMENT

UAE: விடுமுறைக்கு ‘ஜெபல் ஜெய்ஸ்’ செல்பவர்களின் கவனத்திற்கு: முக்கிய சாலையில் கட்டுமான அபாயங்கள் குறித்து காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை…

Published: 30 Nov 2024, 11:11 AM |
Updated: 30 Nov 2024, 4:17 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் 53வது தேசிய தினத்தை (Eid Al Etihad) முன்னிட்டு அமீரகம் முழுவதும் அரசு மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு இன்று சனிக்கிழமை (நவம்பர் 30) முதல் செவ்வாய்கிழமை (டிசம்பர் 3) வரை என நான்கு நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே இந்த நீண்ட விடுமுறை நாட்களை நண்பர்களுடனும் குடும்பத்தினர்களுடனும் சேரந்து கழிக்க அமீரக குடியிருப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் அமீரகத்தில் தற்போது குளிர்காலம் தொடங்கியிருப்பதால் மலைப்பகுதிகளான ஜெபல் ஜெய்ஸ் (jebel jais), ஜெபல் ஹஃபீத் (jebel hafeet) உள்ளிட்ட இடங்களுக்கும் பெரும்பாலானவர்கள் செல்வது வழக்கம்.

இந்நிலையில் விடுமுறை நாட்களை ராஸ் அல் கைமாவில் கழிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ராஸ் அல் கைமா காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜெபல் ஜெய்ஸ் சாலைக்கு அருகில் கட்டுமான பணிகள் நடத்து வருவதால் விபத்து ஏற்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாக வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அந்த அறிவிப்பில், ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை என மூன்று மாதங்களுக்கு இப்பகுதியில் சாலையோர பாதுகாப்பு திட்டம் நடைபெற உள்ளதாகவும் குடியருப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வாடி ஷாஹா-ஜெபல் ஜெய்ஸ் சாலை அருகே பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT