ADVERTISEMENT

நாளை துபாய் மெட்ரோ இயங்கும் நேரத்தில் மாற்றம்..!! RTA ட்வீட்..!!

Published: 9 Nov 2024, 8:53 AM |
Updated: 9 Nov 2024, 8:53 AM |
Posted By: admin

துபாயில் நாளை (நவம்பர் 10, 2024, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) ஒரு பகுதியான ‘துபாய் ரைடு (Dubai Ride)’ நிகழ்வை முன்னிட்டு துபாய் மெட்ரோ செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாய் மெட்ரோவின் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் அதிகாலை 3.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரபு பிராந்தியத்தின் மிகப்பெரிய சமூக சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வான துபாய் ரைடின் ஐந்தாவது பதிப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே துபாய் ரைடில் கலந்துகொள்ளும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக துபாய் மெட்ரோவின் நேரத்தை RTA நீட்டித்துள்ளது.

மேலும் இந்த நிகழ்வானது வயது அல்லது திறனைப் பொருட்படுத்தாமல் சைக்களில் துபாயை சுற்றும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்குகிறது. இந்த துபாய் ரைடு நிகழ்வு நடைபெறவிருக்கும் பாதைகள் அதிகாலை 5 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படும், பின்னர் சைக்கிள் ஓட்டும் நிகழ்வானது காலை 6.15 மணிக்கு தொடங்கி காலை 8 மணிக்கு முடிவடையும்.

ADVERTISEMENT

துபாயின் பிரபலமான ஷேக் சையது சாலையில் (sheikh zayed road) அமைக்கப்பட்டுள்ள 12 கிமீ பாதையில் நடைபெறவிருக்கும் சைக்கிள் ஓட்டும் நிகழ்வானது, குடியிருப்பாளர்களுக்கு உற்சாகமான அனுபவத்தை தருவது மட்டுமல்லாமல் ஒரு தனித்துவமான வாய்ப்பையும் அனைவருக்கும் வழங்கும்.

அத்துடன் இதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 30kmph வேகத்தை பராமரிக்க வேண்டும், இந்த வேகத்தைத் தாங்கும் திறன் கொண்ட பைக்கை அவர்கள் ஓட்ட வேண்டும் மற்றும் துபாய் ரைடு மார்ஷல்களின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் மிகப்பெரிய இருசக்கர வாகனப் பகிர்வு நிறுவனமான கரீம் (careem) துபாயின் RTA உடன் இணைந்துள்ளதால், இந்நிகழ்வில் பங்கேற்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கரீம் பைக்கை வாடகை கட்டணம் இல்லாமல் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel