ADVERTISEMENT

துபாய்: ஷேக் சையத் சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த வாகனம்.. 2 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல்..!!

Published: 13 Nov 2024, 5:20 PM |
Updated: 13 Nov 2024, 5:26 PM |
Posted By: admin

துபாயில் இன்று (புதன்கிழமை) மாலை முக்கிய சாலையான ஷேக் சையத் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலையின் மத்தியில் எமிரேட்ஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கும் கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கும் இடையே உள்ள பகுதியில் இந்த வாகன விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போக்குவரத்து பெரிதளவில் பாதிப்படைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது துபாயில் இருக்கும் வேர்ல்டு டிரேடு சென்டர் ரவுண்டானாவில் இருந்து அபுதாபி நோக்கி செல்லக்கூடிய பாதையில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 கிமீ நீளத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருவதுண்டு. இதன் காரணமாக அரசு அதிகாரிகளும் வாகனத்தை இயக்க ஆரம்பிப்பதற்கு முன் வாகனத்தின் நிலையை நன்றாக சோதித்து விட்டு இயக்க வேண்டும் என பலமுறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel