ADVERTISEMENT

துபாய்: இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் RTA..!!

Published: 31 Dec 2024, 1:59 PM |
Updated: 31 Dec 2024, 2:09 PM |
Posted By: admin

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சில இன்டர்சிட்டி பேருந்துகளை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வழித்தடங்கள் டிசம்பர் 31, 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை இடைநிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் E100 மற்றும் அல் ஜாஃபிலியா பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் E102 ஆகிய வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக, இப்னு பட்டுடா பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் E101ஐ மாற்றுப் பேருந்துப் பாதையாகப் பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT