ஐக்கிய அரபு அமீரகத்தை பொருத்த வரையில் எந்தவொரு எமிரேட்டிலும் முழுநேர வேலையைத் தவிர்த்து ஃப்ரீலான்ஸராக வேலை செய்ய அனுமதி பெறுவது அவசியமாகும். அவ்வாறு நீங்கள் ஃப்ரீலான்சிங் அனுமதிக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், துபாயில் ஃப்ரீலான்சிங் வேலைத் தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது. ஏனெனில் உங்களால் இப்போது மூன்றே வேலை நாட்களில் ஃப்ரீலான்ஸர் அனுமதியை துபாயில் பெற முடியும்.
ஆம், எக்ஸ்போ சிட்டி துபாய் (ECD) ஒரு ஃப்ரீலான்ஸர் அனுமதியை வெளிநாட்டவர்களுக்கு வழங்குகிறது, இது எக்ஸ்போ சிட்டி துபாய் ஆணையத்தால் (ECDA) செயல்படுத்தப்படும் விசா வகையாகும். இதன் கீழ் ஃப்ரீலான்சிங் அனுமதி பெற தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் செலவு போன்ற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் அனுமதிகள்:
• 9,000 திர்ஹம்ஸிற்கு ஒரு வருட அனுமதி மற்றும் புதிய வேலைவாய்ப்பு விசா.
• 16,000 திர்ஹம்ஸிற்கு இரண்டு வருட அனுமதி
• சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், ஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர் அல்லது ஒப்பனை கலைஞர் போன்ற 90 க்கும் மேற்பட்ட தொழில்முறை நடவடிக்கைகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
பதிவு செய்வது எப்படி?
ஃப்ரீலான்ஸ் அனுமதியில் ஆர்வமுள்ளவர்கள், எக்ஸ்போ சிட்டி துபாயில் உள்ள கஸ்டமர் ரிலேஷன்ஸ் சென்டருக்கு crc@expocitydubai.ae இல் மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ அல்லது சஸ்டைனபிலிட்டி டிஸ்ட்ரிக்ட்டில் உள்ள பெண்கள் பெவிலியனின் இரண்டாவது தளத்தில் ECD க்குள் அமைந்துள்ள வாடிக்கையாளர் உறவுகள் மையத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ ஃப்ரீலான்ஸ் அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு பதிவு செய்யலாம்.
பின்பற்றவேண்டிய படிகள்:
படி 1:
எக்ஸ்போ சிட்டி துபாய் ஆணையத்தை (ECDA) நீங்கள் தொடர்பு கொண்டதும், ஃப்ரீலான்ஸ் அனுமதி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கு ECDA போர்ட்டலில் உள்நுழைந்து, பின்னர் ‘Individuals’ என்ற வகையைப் பார்க்கும் வரை கீழே ஸ்க்ரோல் செய்து, ‘Freelancer Permit Application Form’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது படிவத்தைப் பதிவிறக்கி நிரப்பவும், பின்னர் அதை போர்ட்டலில் சமர்ப்பிக்கவும்.
பணம் செலுத்துதல்:
விண்ணப்பம் சமர்ப்பித்து பணம் செலுத்தும் வரை விண்ணப்பங்கள் செயலாக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 7,000 திர்ஹம்ஸ் வரை கட்டணம் செலுத்த வேண்டும், இதில் ECDA க்கு ரீபன்ட் செய்ய முடியாத (non-refundable) 500 திர்ஹம்ஸ் விண்ணப்பக் கட்டணமும் அடங்கும்.
படி 2:
ECDA உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும். மேலும், உங்கள் விண்ணப்பத்தை ஆதரிக்க, உங்கள் வேலை தொடர்பான போர்ட்ஃபோலியோ போன்ற கூடுதல் ஆவணங்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும் ECD ஃப்ரீலான்ஸ் அனுமதி, ஒரு ECD அடையாள அட்டை மற்றும் UAE குடியிருப்பு விசா வழங்கப்படும்.
படி 3:
ஒரு ECD நிறுவன அட்டை தனிநபருக்கு வழங்கப்படும், அதில் வரிசை எண், தனிநபரின் பெயர், காலாவதி தேதி மற்றும் ஃப்ரீலான்ஸருக்கான ஒரு விசாவின் ஒதுக்கீடு ஆகியவை அடங்கும். ஃப்ரீலான்ஸருக்கு நிறுவன அட்டை ஒரு விருப்பத் தேவையாகும், ஃப்ரீலான்ஸர் UAE குடியிருப்பு விசாவைப் பெற விரும்பினால் மட்டுமே அது தேவைப்படும். UAE குடிமக்கள் அல்லது சுய ஸ்பான்சர்ஷிப் பெற்ற நபர்களுக்கு குடியிருப்பு விசா பொருந்தாது.
செயலாக்கும் காலம்?
துபாய் எக்ஸ்போ சிட்டியால் வழங்கப்படும் இந்த ஃப்ரீலான்ஸ் விசாவை பெறுவதற்கான செயல்முறை காலம் வெறும் மூன்று வேலை நாட்கள் மட்டுமே ஆகும். ஒருவேளை விண்ணப்பதாரருக்கு அமீரக குடியிருப்பு விசா தேவைப்பட்டால், செயல்முறை ஐந்து வேலை நாட்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel