துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (mall of the emirates) அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. துபாயின் அல் பர்ஷாவில் உள்ள டைம் டோபஸ் (Time Topaz) ஹோட்டல் அடுக்குமாடி குடியிருப்பில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தின் தரை தளம் முதல் மேல் தளம் வரை என கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ வேகமாக பரவியுள்ளது.
இது குறித்து சமூக ஊடகத்தில் வெளியான வீடியோக்களில், தீ வேகமாக பரவுவதும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடுவதும் இடம்பெற்றுள்ளன. அருகிலுள்ள ஹோட்டல் ஊழியர்கள் கூறுகையில் தீவிபத்துக்குள்ளான கட்டிடத்தில் வசித்த பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் மற்றும் யாராவது காயமடைந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஞாயிற்றுக்கிழமை, துபாய் மெரினா துறைமுகத்தில் உள்ள கடல் பெட்ரோல் நிலையத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த படகில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இருந்த போதிலும், அரை மணி நேரத்தில் இந்த தீ அணைக்கப்பட்டது என சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel