துபாயில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் நபர்கள் பயன் பெறும் விதமாக கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் துபாயில் இருக்கக்கூடிய முக்கிய நான்கு பேருந்து நிலையங்களில் மக்களுக்கு இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த சேவையானது வரும் நாட்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் துபாயின் மேலும் சில பேருந்து நிலையங்கள் இலவச வைஃபை கவரேஜின் கீழ் வந்துள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தற்பொழுது அறிவித்துள்ளது. நான்கு பேருந்து நிலையங்களில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்ட இந்தச் சேவை, தற்போது மால் ஆஃப் தி எமிரேட்ஸ், இபின் பட்டுடா, இன்டர்நேஷனல் சிட்டி, சிட்டி சென்டர் தேரா, அல் குசைஸ் மற்றும் அல் ஜாஃபிலியா பேருந்து நிலையங்கள் ஆகிய நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் தடையற்ற பொது போக்குவரத்து அனுபவத்தை உறுதி செய்வதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய ஆணையம், அனைத்து நிலையங்களையும் உள்ளடக்கிய இந்த சேவையின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் மற்ற பேருந்து நிலையங்களிலும் இந்த சேவை கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel