ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது நாளை தொடங்கவிருக்கும் புத்தாண்டின் ஜனவரி மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் எரிபொருள் விலையானது சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது வரவிருக்கும் புத்தாண்டின் முதல் மாதத்தில் தற்போதுள்ள எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் குழுவின் ஜனவரி மாத விலைப்பட்டியலின் படி, Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.61 திர்ஹம்ஸாக இருக்கின்றது. இந்த வகை பெட்ரோலின் விலையானது நவம்பர் மாதத்தில் 2.74 திர்ஹம்சாக இருந்தது.
அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது தற்போதைய அறிவிப்பின்படி, ஒரு லிட்டருக்கு 2.50 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.43 திர்ஹம்ஸாக உள்ளது. அதே போல் பெட்ரோல் விலை 2.68 திர்ஹம்சாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சந்தையில் நிலவிய விலையேற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சற்று உயர்த்தப்பட்டிருந்தது. பின் செப்டம்பர், அக்டோபர் மாத விலை சரிவைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் அனைத்து வகையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பைக் கண்டது. அதே நேரம் டிசம்பர் மாதத்தில் சற்று குறைக்கப்பட்டிருத்த நிலையில் வரும் ஜனவரி மாதத்திலும் விலை மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel