ADVERTISEMENT

நிஜமாகும் கனவுத் திட்டம்.. பயணத்தை தொடங்கவிருக்கும் ‘ஏர் கேரளா’.. கையெழுத்தான ஒப்பந்தம்..!!

Published: 6 Jan 2025, 1:40 PM |
Updated: 6 Jan 2025, 1:41 PM |
Posted By: admin

துபாயில் வசிக்கக் கூடிய இரு இந்திய தொழிலதிபர்களால் இணைந்து தொடங்கப்பட்ட, குறைந்த விலைக் கட்டண விமான பயணத்தின் கனவுத் திட்டமான ‘ஏர் கேரளா (Air Kerala)’ தற்போது அதன் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது. ஆம், இந்த ஆண்டு முதல் ஏர் கேரளா விமானம் இந்திய விமான நிலையங்களில் இருந்து தனது பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய மாநிலமான கேரளாவில் அமைந்துள்ள கண்ணூர் விமான நிலையம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் மைசூருவில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகிய இரண்டு விமான நிலையங்களிலிருந்து இந்த விமானத்தை இயக்குவதற்கான ஒப்பந்தங்களில், ஏர் கேரளா அதிகாரிகள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் உள்நாட்டு செயல்பாடுகளைத் தொடங்க உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சர்வதேச விமான சேவைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விமான நிறுவனத்தின் தலைவர் அஃபி அகமது கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், கண்ணூர் மற்றும் மைசூரு ஆகிய இரு நிலையங்களுடனான ஒத்துழைப்பு, பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

Supplied photos

ADVERTISEMENT

கேரளாவில் உள்ள கொச்சியை அதன் முக்கிய தளமாக கொண்டு செயல்படும் ஏர் கேரளா, இந்த வாரம் அதன் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அனுமதியைப் பெற்றதாகத் தெரிவித்த துணைத் தலைவர் அயூப் கல்லாடா, “இந்தியாவின் சிவில் ஏவியேஷன் பொது இயக்குநரகத்தால் (DGCA) வழங்கப்படும், ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (AOC) பெறுவதற்கு இது ஒரு படி நெருக்கமாக செல்கிறது” என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் வணிக ரீதியான விமானப் போக்குவரத்து செயல்பாடுகளை தொடங்க AOC சான்றிதழ் கட்டாயமாகும்.

மலிவு விலை

ஏர் கேரளா, மிகவும் மலிவு விலையில் டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம், பயணிகளை முதலிடத்தில் வைப்பதில் கவனம் செலுத்தும் மற்றும் ஏர் கேரளாவில் உள்ள பயணிகள் சரியான நேரத்தில் தங்கள் இலக்குகளை அடைவார்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்ப்பது எங்களின் மிக முக்கியமான அம்சம் என்று ஏர்லைன்ஸின் CEO ஹரீஷ் குட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, விமான நிறுவனத்தின் தாய் நிறுவனமான Zettfly Aviation இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) பெற்றது. அப்போது, ​​விமான நிறுவனத்தின் நோக்கம் என்ன என்பதை கல்லடா விளக்கியிருந்தார். அதாவது, இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களை முதல் நர மற்றும் மெட்ரோ சிட்டி விமான நிலையங்களுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆட்சேர்ப்பு

ஏர் கேரளா விமான நிறுவனம் இப்போது தனது செயல்பாடுகளை தொடங்குவதற்கு முன்னதாக அனுபவம் வாய்ந்த விமான சேவையாளர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. தற்போது, UAE மற்றும் GCCயில் இருந்து விமானப் போக்குவரத்து நிபுணர்களையும், விமானிகளையும் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் அனுபவம் உள்ளவர்களையும் பணியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விமான நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel