UAE: உங்கள் முதலாளி உங்களை கூடுதல் நேரம் வேலை செய்யக் கோரலாமா? தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பல ஊழியர்கள் சில சந்தர்ப்பங்களில் தங்கள் முதலாளிகளால் கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை பார்க்குமாறு கோரப்படுகிறார்கள்.
ஊழியர்களின் ஓய்வு நேரத்தில் கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு முதலாளிகள் கோரலாமா? ஒரு ஊழியர் வேலை நாளில் எத்தனை முறை மற்றும் எத்தனை மணி நேரம் ஓய்வு எடுக்கலாம்? கூடுதல் நேர வேலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இது குறித்து அமீரகத் தொழிலாளர் சட்டம் என்ன கூறுகிறது? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு முழுநேர ஊழியர், வேலை நாளில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை வேலை செய்யலாம். இருப்பினும், சில நிறுவனங்களில் தங்களது உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
UAEயின் கூட்டாட்சி தொழிலாளர் சட்டத்தின் 18 வது பிரிவின்படி, தொழிலாளி ஓய்வு காலம் இல்லாமல் அல்லது ஒரு மணிநேர இடைவேளை இல்லாமல் ஐந்து மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது.
கூட்டாட்சி தொழிலாளர் சட்டத்தால் இந்த ஆணையின் நிர்வாக ஒழுங்குமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகைப்பாட்டின் படி, பணி நேரம் மற்றும் ஓய்வு நேரமானது ஷிப்ட் முறையுடன் செயல்படும் நிறுவனத்தில் அல்லது கள வேலைகள் (firld works) போன்ற சில வேலை வகைகளில் அவற்றின் இயல்புக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படும்.
கூடுதல் வேலை நேரம் (ஓவர் டைம்) தொடர்பான கூட்டாட்சி தொழிலாளர் சட்டத்தின் 19 வது பிரிவின் படி, சாதாரண வேலை நேரத்தைத் தாண்டி கூடுதல் வேலை நேரம் வேலை செய்யுமாறு முதலாளி கோரலாம். ஆனால், அது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், சட்டத்தின் மூலம் இந்த ஆணையின் நிர்வாக ஒழுங்குமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஊழியர் அதற்கு மேல் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. எல்லா சந்தர்ப்பங்களிலும், மொத்த வேலை நேரம் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் 144 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், சாதாரண வேலை நேரங்களுக்கு இணையான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. கூடுதல் நேர வேலைக்கான சம்பளம் ஊழியரின் அடிப்படை ஊதியத்தின்படி கணக்கிடப்படுகிறது. மேலும் அத்தகைய ஊதியத்தில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் கூடுதலாக வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel