ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவானது அமீரக குடியிருப்பாளர்களை இன்று ஷவ்வால் மாத பிறையை பார்க்குமாறு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்று பிறை பார்க்கப்பட்டதாக அமீரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது நாளை மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் இன்று சனிக்கிழமை மார்ச் 29, ரமலான் மாதத்தின் கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் பிறை பார்க்கப்பட்டதாக தற்சமயம் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்பொழுது அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரக குடியிருப்பாளர்கள் நாளை ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் சவூதி அரேபியாவை பின்பற்றும் என்பதால் நாளை ஈத் அல் ஃபித்ர் என அறிவிப்பு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel