அபுதாபியில் இருக்கக்கூடிய இரண்டு முக்கிய சாலைகளில் வேக வரம்பானது குறைக்கப்பட விருப்பதாக அபுதாபி மொபிலிட்டி (AD Mobility) தெரிவித்துள்ளது. அபுதாபி மொபிலிட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஷேக் கலீஃபா பின் சயீத் இன்டர்நேஷனல் சாலையில் (E11) வேக வரம்பை 160 கிமீ/மணியிலிருந்து 140 கிமீ/மணிக்கு வரும் ஏப்ரல் 14, 2025 முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதே போல் அபுதாபி-ஸ்வைஹான் (sweihan) சாலையில் (E20) வேக வரம்பு ஏப்ரல் 14, 2025 முதல் மணிக்கு 120 கிமீட்டரில் இருந்து 100 கிரோ மீட்டராக குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்ர திருத்தப்பட்ட வேக வரம்பு, எமிரேட்டில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், அமலுக்கு வரவிருக்கும் திருத்தப்பட்ட புதிய வேக வரம்பைக் கடைப்பிடித்து வாகனம் ஓட்டுமாறு வாகன ஒட்டிகளை அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், சாலையில் பயணிக்கும் போது அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறும் அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.


இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel