ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் உயர தொடங்கும் வெப்பநிலை.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..

Published: 21 Apr 2025, 9:21 AM |
Updated: 21 Apr 2025, 9:25 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வானிலை முன்னறிவிப்பில் அமீரகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையில் மாற்றம் இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. அதாவது அமீரகம் முழுவதும் இன்று வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், இரவில் ஈரப்பதமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை காலை வரை சில கடலோரப் பகுதிகளில் ஈரப்பதமான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் மணிக்கு 30 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை, ஏப்ரல் 22 அன்று நாடு முழுவதும் வெப்பநிலையில் தொடர்ந்து அதிகரிப்பு இருக்கும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel