ADVERTISEMENT

துபாய்: முக்கிய சாலையில் ஆகஸ்ட் வரை போக்குவரத்து தாமதம் ஏற்படும்.. RTA அறிவிப்பு..!!

Published: 2 May 2025, 12:02 PM |
Updated: 2 May 2025, 12:07 PM |
Posted By: admin

ஷார்ஜா நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் எமிரேட்ஸ் சாலையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த தாமதமானது வரும் ஆகஸ்ட் 30, 2025 வரை வார இறுதி நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய்-அல் அய்ன் சாலைக்கும் ஷார்ஜா நோக்கிச் செல்லும் அல் அமர்தி-அல் அவீர் சாலை இன்டர்செக்ஷனுக்கும் இடையிலான பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இந்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனவே நெரிசலைத் தவிர்க்கவும், சீரான பயணத்தை பெறவும், சரியான நேரத்தில் தங்கள் இலக்குகளுக்குச் செல்வதையும் உறுதிசெய்ய ஓட்டுநர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel