ADVERTISEMENT

ஈத் அல் அதா: துல் ஹஜ் மாத பிறையை பார்க்குமாறு அழைப்பு விடுத்த சவூதி..!!

Published: 25 May 2025, 5:27 PM |
Updated: 25 May 2025, 5:27 PM |
Posted By: admin

இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் அல் அதா எனும் ஹஜ் பெருநாள் வருவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கின்றன. இந்நிலையில் இந்த நாளை குறிக்கும் தேதியை உறுதிப்படுத்த இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்கக்கூடிய பிறையை செவ்வாய்க்கிழமை (27.5.25) அன்று பார்க்குமாறு சவுதி அரேபியா அனைத்து முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை மாலை காணப்படலாம் என வானியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்த ஒரு அறிவிப்பில், நாட்டின் உச்ச நீதிமன்றம் பிறையை வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பார்க்கக்கூடிய அனைவரும் அருகிலுள்ள நீதிமன்றத்திற்கு அறிவித்து அவரது சாட்சியத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளது. மேலும் அவர்கள் அருகில் உள்ள மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

“இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டக்கூடிய திறமை உள்ளவர்கள், இந்த நோக்கத்திற்காக பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதாக அரசு நடத்தும் சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) அறிக்கை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மே 27 அன்று பிறை தென்பட்டால் ஜூன் 5 வியாழக்கிழமை அரஃபா நாளும், அதைத் தொடர்ந்து ஜூன் 6 வெள்ளிக்கிழமை ஈத் அல் அதா (தியாகப் பெருநாள்) நாளும் இருக்கும். இருப்பினும், மே 27 அன்று பிறை நிலவு காணப்படாவிட்டால், மே 29 அன்று துல் ஹஜ் மாதம் தொடங்கும். இதன் விளைவாக, அரஃபாத் தினம் ஜூன் 6 அன்று இருக்கும், ஜூன் 7 ஈத் அல் அதா கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.