ADVERTISEMENT

துபாய்: பயண நேரத்தை 61% குறைக்க புதிய சுரங்கப்பாதை.. போக்குவரத்தை மேம்படுத்தும் RTA..!!

Published: 25 May 2025, 7:57 PM |
Updated: 25 May 2025, 8:09 PM |
Posted By: admin

துபாயில் போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு சாலை திட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த வண்ணம் உள்ளன. அதில் தற்பொழுது அல் கைல் சாலைக்கும் ஷேக் முகமது பின் சயீத் சாலைக்கும் இடையிலான நெரிசலைக் குறைப்பதற்கும் பயண நேரத்தைக் குறைப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு சாலைத் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அதாவது 332 மில்லியன் திர்ஹம் செலவில் உருவாக்கப்பட்டு வரும் உம்மு சுகீம் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டம் தற்போது 70 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துள்ளது என்றும், மேலும் ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகளைக் கொண்ட 800 மீட்டர் சுரங்கப்பாதையையும் (tunnel) உள்ளடக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் தாயர், உம் சுகீம் அல் குத்ரா மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். மொத்தம் 16 கி.மீ. நீளமுள்ள இந்த மெகா திட்டம் ஜுமேரா ஸ்ட்ரீட்டில் இருந்து எமிரேட்ஸ் சாலை வரை செல்கிறது.

இது குறித்து தெரிவிக்கையில் “துபாயில் உள்ள நான்கு முக்கிய முக்கிய சாலைகளான ஷேக் சயீத் சாலை, அல் கைல் சாலை, ஷேக் முகமது பின் சயீத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்கான RTAவின் முயற்சிகளை இந்த திட்டம் நிறைவு செய்கிறது,” என்று அவர் கூறினார். மேலும் “இது இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்களாக பாதையின் திறனை அதிகரிக்கவும், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், ஷேக் முகமது பின் சயீத் சாலை மற்றும் அல் கைல் சாலை இடையேயான பயண நேரத்தை 9.7 நிமிடங்களிலிருந்து வெறும் 3.8 நிமிடங்களாக 61 சதவீதம் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது நிறைவடைந்தவுடன், மொத்த மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் உள்ள அல் பர்ஷா சவுத் 1, 2, மற்றும் 3, துபாய் ஹில்ஸ், அர்ஜன் மற்றும் துபாய் சயின்ஸ் பார்க் உள்ளிட்ட பல முக்கிய குடியிருப்பு மற்றும் மேம்பாட்டு மண்டலங்களுக்கு சேவை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திட்டம் அல் கைல் சாலை இன்டர்செக்ஷனில் இருந்து ஷேக் முகமது பின் சயீத் சாலை இண்டர்செக்ஷன் வரை 4.6 கிமீ நீளமுள்ள இந்த திட்டத்தில், கிங்ஸ் பள்ளிக்கு அருகிலுள்ள உம் சுகீம்-அல் பர்ஷா சவுத் இண்டர்செக்ஷன் மேம்பாடு அடங்கும். இதில் உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகள் கொண்ட 800 மீட்டர் சுரங்கப்பாதை கட்டுமானம் அடங்கும், மேலும் போக்குவரத்து சிக்னல்களுடன் ஒரு இண்டர்செக்ஷன் இருக்கும்.

ADVERTISEMENT

முன்னதாக, 2013 ஆம் ஆண்டில், RTA இந்த திட்டத்தின் கட்டம் I ஐ நிறைவு செய்தது, இது ஷேக் சயீத் சாலை மற்றும் அல் கைல் சாலைக்கு இடையிலான பகுதியை உள்ளடக்கியது மற்றும் இரண்டு பாலங்களின் கட்டுமானத்தையும் உள்ளடக்கியது. இவை ஒவ்வொன்றும் இரு திசைகளிலும் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது. பின்னர், 2020 ஆம் ஆண்டில், துபாய் ஹில்ஸ் மாலுக்கான பாலங்கள் மற்றும் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உம் சுகீம் ஸ்ட்ரீட்டில் ஒரு பிரதான பாலத்தை RTA திறந்தது. இந்த 500 மீட்டர் பாலம் ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகளையும் இரு திசைகளிலும் மணிக்கு 16,000 வாகனங்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்பொழுது சாலைத் திட்டங்களைக் கண்காணிக்க எமிரேட் முழுவதும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. திட்ட முன்னேற்றத் தரவைப் பிடிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன, கட்டுமான செயல்திறனை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுகிறது. இது தளத்தில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளது, முடிவெடுக்கும் செயல்முறைகளை விரைவாகச் செய்துள்ளது, மேலும் நிகழ்நேர, உயர் துல்லியமான தரவை வழங்குவதை சாத்தியமாக்கியுள்ளது என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel