ADVERTISEMENT

ஈத் அல் அதாவின் முதல் தேதியை அறிவித்த அமீரகம்..

Published: 27 May 2025, 8:44 PM |
Updated: 27 May 2025, 8:53 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத பிறையை பார்க்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அமீரகத்தில் பிறை தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மே 28 புதன்கிழமை துல் ஹஜ் மதத்தின் முதல் நாளாக இருக்கும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டு ஈத் அல் அதா துல் ஹஜ் மாதத்தின் 10ம் நாளான ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று கூறப்படுகின்றது. அதே போல், அரஃபா தினம் ஜூன் 5 ஆம் தேதி வியாழக்கிழமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அட்டவணையில், அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதாவிற்கான விடுமுறை துல் ஹஜ் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், நான்கு நாள் விடுமுறை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனடிப்படையில், ஈத் அல் அதா வெள்ளிக்கிழமை வருவதை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் நீண்ட வார விடுமுறையை அனுபவிக்கலாம். அதாவது, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாகவும், அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை நாட்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT