ADVERTISEMENT

கொளுத்தும் வெயில்.. வரலாறு காணாத அளவு வெப்பநிலை உயர்வு.. அவதிப்படும் அமீரகவாசிகள்..!!

Published: 25 May 2025, 3:37 PM |
Updated: 25 May 2025, 3:40 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அதில் நேற்று (சனிக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலையாக 51.6°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. அல் அய்னில் உள்ள ஸ்வீஹானில் இந்த வெப்பநிலையானது பதிவாகி இருக்கின்றது.

ADVERTISEMENT

இந்த கடுமையான வெப்பம் இந்த வருட சீசனில் இதுவரை பதிவான மிக உயர்ந்த வெப்பநிலைகளில் ஒன்றாகும், இது வரும் மாதங்களில் வரவிருக்கும் கடுமையான கோடை வெப்பத்தின் ஆரம்ப தொடக்கத்தைக் குறிபதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வானிலைத் துறையின் கூற்றுப்படி, கடந்த மே 23 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் 50.4ºC வெப்பம் பதிவாகியுள்ளது, இது 2003 ஆம் ஆண்டு முதல் பதிவாகி வந்த வெப்பநிலையில் மே மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலையாகும். அதனை தொடர்ந்து தற்பொழுது நேற்றும் வெப்பநிலையானது உயர்ந்துள்ளது.

அத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் சராசரியாக தினசரி 42.6ºC ஆக வெப்பம் பதிவாகியுள்ளது. இது ஏப்ரல் 2017 இல் பதிவான சராசரி தினசரி அதிகபட்ச வெப்பநிலையான 42.2ºC ஐ விட அதிகமாக இருந்தது என்று NCM தெரிவித்துள்ளது. இது 2003 முதல் அமீரகத்தில் நிலவும் வெப்பநிலை குறித்த விரிவான புள்ளிவிவரங்களை வைத்திருக்கிறது.

ADVERTISEMENT

அதே போல வரும் ஜூன் 21 அன்று கோடைகால சங்கிராந்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வானியல் கோடைகால தொடக்கத்திற்கு முன்பே தற்பொழுது வெப்பநிலை உயர தொடங்கியுள்ளது. கோடைகால சங்கிராந்தி என்பது “சூரியன் வானத்தில் அதன் மிக உயர்ந்த மற்றும் வடக்குப் புள்ளியை அடையும் தருணம்” என்று துபாய் வானியல் குழுமத்தின் செயல்பாட்டு மேலாளர் கதீஜா அல் ஹரிரி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், உச்ச கோடை காலத்தில் ஐக்கிய அரபு அமீரகம் ஸ்வீஹானில் 50.8°C ஐப் பதிவு செய்தது. ஆனால் தற்பொழுது இந்த ஆண்டு மே மாதத்திலேயே வெப்பநிலை இதனை தாண்டியுள்ளது. வெப்பநிலை 51°C ஐத் தாண்டுவதால், குடியிருப்பாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel