ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் விலை சற்றே குறைந்திருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் விலைகள் பெரிதளவு மாற்றமில்லாமல் இருக்கின்றன. அமீரகத்தில் எரிபொருள் விலைக் குழுவால் அறிவிக்கப்பட்ட புதிய விலைகள், உலகளாவிய சந்தைப் போக்குகளைப் பிரதிபலிக்கின்றன.
செப்டம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் விலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 98 பெட்ரோல்: ஒரு லிட்டர் 2.70 திர்ஹம்ஸ் ஆக அதிகரித்துள்ளது (ஆகஸ்ட் மாதத்தில் 2.69 திர்ஹம்ஸாக இருந்தது)
ஸ்பெஷல் 95 பெட்ரோல்: ஒரு லிட்டர் 2.58 திர்ஹம்ஸ் (2.57 திர்ஹம்ஸாக இருந்தது)
E-Plus 91 பெட்ரோல்: ஒரு லிட்டர் 2.51 திர்ஹம்ஸ் (2.50 திர்ஹம்ஸாக இருந்தது)
டீசல்: ஒரு லிட்டர் 2.66 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்படுகிறது (2.78 திர்ஹம்ஸாக இருந்தது)
முதன்முதலாக, 2015 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் எரிபொருள் விலையை கட்டுப்பாட்டிலிருந்து நீக்கியதிலிருந்து, உலகளாவிய எண்ணெய் இயக்கங்களின் அடிப்படையில் நாடு மாதந்தோறும் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது வழக்கம். எரிபொருள் விலை மீண்டும் உயரும் போது வாகன ஓட்டிகள் தங்கள் எரிபொருள் பட்ஜெட்டை அதற்கேற்ப திட்டமிட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel