ADVERTISEMENT

மூடப்படும் முக்கிய சாலைகள்.. நீட்டிக்கப்படும் மெட்ரோ நேரம்.. ‘Dubai Ride’-ஐ முன்னிட்டு அறிவிப்பு..

Published: 1 Nov 2025, 6:27 PM |
Updated: 1 Nov 2025, 6:27 PM |
Posted By: admin

துபாய் ஃபிட்னஸ் சேலன்ஜின் ஒரு பகுதியான துபாய் ரைடு நிகழ்வானது நாளை (நவம்பர் 2) நடைபெறவுள்ள நிலையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், பயணிகளுக்கு இந்த வழித்தடத்தை எளிதில் முடிக்க அனுமதிக்கும் வகையில் அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரை தொடர்ச்சியான சாலை மூடல்கள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மூடப்படும் சாலைகளின் விபரங்கள்:

  • ட்ரேட் சென்டர் ரவுண்டானாவிற்கும் அல் ஹதீஜா சாலை பிரிட்ஜிற்கும் இடையிலான ஷேக் சயீத் சாலையின் ஒரு பகுதி.
  • ஷேக் சயீத் சாலைக்கும் அல் கைல் சாலைக்கும் இடையிலான லோயர் ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் (Lower Financial Centre Street)
  • ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டின் ஒரு வழி திசை (one way direction)

இந்த சாலை மூடல்களின் போது, ​​RTA அதற்கு பதிலாக எடுக்க வேண்டிய மாற்று வழிகளை பரிந்துரைத்துள்ளது. இதில் பின்வருவன அடங்கும். அவை

ADVERTISEMENT
  • அப்பர் பைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் (Upper Financial Centre Street)
  • ஜபீல் பேலஸ் ரோடு
  • அல் வாஸல் ரோடு
  • அல் கைல் ரோடு
  • அல் அசயேல் ஸ்ட்ரீட்

துபாய் மெட்ரோ நேரம் நீட்டிப்பு

துபாய் ரைடை முன்னிட்டு துபாய் மெட்ரோ இயங்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் மெட்ரோ இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு 35,000 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்நிகழ்வில் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு அதை விட அதிக நபர்கள் வர வாய்ப்புள்ளதால் பெரிய நிகழ்வுக்கு ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பங்கேற்பாளர்கள் 4 கிமீ குடும்ப நட்பு வழியைத் தேர்வுசெய்யலாம் அல்லது மிகவும் அனுபவமிக்க சைக்ளிஸ்ட்கள் 12 கிமீ பாதையை தேர்வு செய்யலாம்.

2017 ஆம் ஆண்டு துபாய் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான மேன்மைமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் முதன்முதலில் தொடங்கப்பட்ட துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச், அனைவரும் தங்கள் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.