ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் துறையில் ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து பல சாதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மற்றொரு மைல்கல்லாக அபுதாபியில் வரவிருக்கும் ஒரு புதிய கட்டிடம் அமையவுள்ளது. அதாவது பல மாடி உயரமான கட்டிடத்தைக் கட்டுவதற்கு பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் ஆகும் என்று நினைத்திருக்க, ஈகிள் ஹில்ஸ் அபுதாபி நிறுவனம் அதனை தகர்த்து வெறும் சில நாட்களிலேயே இதனை சத்தியமங்கலம் என நிரூபித்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
அதன்படி பூஜ்ஜிய கான்கிரீட் என்று சொல்லக்கூடிய கான்கிரீட்டே இல்லாத 15 மாடி கட்டிடம் வெறும் 12 நாட்களில் கட்டப்பட்டுள்ளது, 200 ரோபோக்கள் அதை ஒன்றாக இணைக்க துல்லியமாக வேலை செய்துள்ளன என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஈகிள் ஹில்ஸின் தலைவர் முகமது அலப்பார், கட்டிடம் எவ்வாறு சாதனை நேரத்தில் அசெம்பிள்(assemble ) செய்யப்பட்டது என்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நான்காவது நாளில் அது சுமார் 12 மாடி உயரமாக இருந்தது என்பதையும், அடுத்த சில நாட்களில் மேலும் மாடிகள் சேர்க்கப்பட்டன என்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது.
அந்த வீடியோவில், கிரேன்கள் தனித்தனி அலகுகளைக் கொண்டு வந்து, பின்னர் அவை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டு, கட்டுகின்றன, கான்கிரீட்டால் கட்டுவதற்குப் பதிலாக உயரமான கட்டிடத்தை ‘அசெம்பிள்’ செய்கின்றன.
p>
ஈகிள் ஹில்ஸ் ப்ராப்பர்ட்டி கட்டியுள்ள இந்த கட்டிடம், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட 100 சதவீத ஆற்றல் திறன் கொண்ட கட்டிடமாகும். அந்த வீடியோ இதை “நவீன கட்டுமானத்தில் ஒரு திருப்புமுனை” என்று அழைத்துள்ளது.
அபுதாபியை தளமாகக் கொண்ட தனியார் ரியல் எஸ்டேட் முதலீடு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ஈகிள் ஹில்ஸ், அல் அய்ன் நகர முனிசிபாலிட்டியுடன் கூட்டு சேர்ந்து, அல் அய்ன் ஒயாசிஸுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பொக்கிஷமான வரலாற்று நிலப்பரப்புகளில் ஒன்றை அமைதியான, ஆண்டு முழுவதும் பார்வையிடக்கூடிய இடமாக மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel