ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஷார்ஜா எமிரேட்டிலும் அரசு நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2026 பொது விடுமுறையாக இருக்கும் என்று ஷார்ஜா அறிவித்துள்ளது.
புத்தாண்டு வியாழக்கிழமை வருவதால் அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு வரும் வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறையை அவர்கள் பெறுவார்கள் என்றும், அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள், ஜனவரி 5, 2026 அன்று மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது ஷிப்ட் முறையின் கீழ் பணிபுரிபவர்களைத் தவிர அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று எமிரேட் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் வியாழக்கிழமை, ஜனவரி 1, 2026, மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக இருக்கும் என்று அறிவித்தது. மேலும், ஜனவரி 2, 2026 வெள்ளிக்கிழமை, மத்திய அரசு ஊழியர்களுக்கு தொலைதூர வேலை நாளாக இருக்கும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.