ADVERTISEMENT

அமீரகத்தில் நிலவும் நிலையற்ற வானிலை.!! உணவு டெலிவரி தாமதமாகலாம் என நிறுவனங்கள் முன்னறிவிப்பு.!!

Published: 14 Dec 2025, 1:04 PM |
Updated: 14 Dec 2025, 1:04 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி நாடு முழுவதும் நிலையற்ற வானிலை நிலவும் என தேசிய வானிலை மையம் நேற்று முன்னெச்சரிக்கை வெளியிட்டிருந்தது. அதேபோன்று இன்று அதிகாலை முதலே நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமீரகத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே இந்த பாதகமான வானிலை காரணமாக, சில உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக சேவைகள் சில பகுதிகளில் தங்கள் விநியோக நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளன. உணவு விநியோக நிறுவனங்கள் தங்கள் விநியோக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில ஆர்டர்கள் தாமதமாகலாம் அல்லது இடைநிறுத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், முகமது பின் சையத் நெடுஞ்சாலையில் துபாய் நோக்கிச் செல்லும் பல உணவு விநியோக ரைடர்கள், மழை காரணமாக தங்களின் பயணத்தை இடைநிறுத்தியதாக சில குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும், தலாபத் (talabat) நிறுவனம் தங்கள் ரைடர்களின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, விநியோகங்களை இடைநிறுத்துவது குறித்து முன்னதாக செயலியில் ஒரு ஆலோசனையையும் வெளியிட்டது.

ADVERTISEMENT

மற்றொரு ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான டெலிவரூ (Delivero), வாடிக்கையாளர்கள் வரையறுக்கப்பட்ட விருப்பங்களைக் காணக்கூடும் என்று எச்சரிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மோசமான வானிலை காரணமாகவும், எங்கள் ரைடர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் கடைகளை நீங்கள் குறைவாகக் காணலாம், மேலும் உங்கள் ஆர்டர் டெலிவிரி ஆவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் ஆகலாம் என்று தெரிவித்துள்ளது.

நிலையற்ற வானிலை

அமீரக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, இந்த வாரம் முழுவதும் நாட்டின் பல பகுதிகளில் நிலையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்பநிலை 13ºC குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் காலகட்டத்தில் அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தி, முன்னதாக ஒரு ஆலோசனையை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link:Khaleej Tamil Whatsapp Channel