ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்களுக்கான புத்தாண்டு விடுமுறையை அறிவித்த அமீரகம்..

Published: 12 Dec 2025, 11:26 AM |
Updated: 12 Dec 2025, 11:46 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் புத்தாண்டு தினத்தன்று, ஜனவரி 1, 2026 வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக இருக்கும் என்று மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொது மற்றும் தனியார் துறைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விடுமுறைகள் தொடர்பான அமைச்சரவை முடிவை செயல்படுத்துவதில் MoHRE வெளியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதே போல் ஐக்கிய அரபு அமீரக கூட்டாட்சி ஆணையம், வியாழக்கிழமை, ஜனவரி 1, 2026, பொதுத்துறை ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து தற்பொழுது தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் புத்தாண்டு தினத்தைத் தொடர்ந்து, ஜனவரி 2, 2026 வெள்ளிக்கிழமை, மத்திய அரசு ஊழியர்களுக்கு தொலைதூர வேலை நாளாக இருக்கும், இதனால் அவர்கள் தங்களின் பணியையும் குடும்ப நேரத்தையும் சமநிலைப்படுத்த முடியும் என்றும் பணியிடத்தில் இருக்க வேண்டிய சூழல் உள்ள பணியாளர்கள் மட்டும் வழக்கம் போல் வேலைக்கு வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT