ADVERTISEMENT

சவுதியில் ரியாத் தமிழ் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்..

Published: 29 Dec 2025, 8:33 PM |
Updated: 29 Dec 2025, 8:33 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைந்த அங்கமாக திகழும் ரியாத் தமிழ்ச் சங்கம், பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருடா வருடம் விளையாட்டுப் போட்டிகளும், மாணவர் கலைவிழாவும், கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அதன் நீட்சியாக, இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக கைப்பந்துப் போட்டிகள், 26-டிசம்பர்-2025  வெள்ளியன்று ரியாத் அபெக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில்,

Fury Falcons – A

ADVERTISEMENT

Fury Falcons – Z

Phoenix Strikers

ADVERTISEMENT

Rising Titans

RTG

Shasma

Shockerz

Sinpers-1

Snipers-2

Spartans Batha

Star Boys

SATSA

ஆகிய 12 அணிகள் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. 12 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு league போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் தலா ஒரு அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டது.

அரையிறுதிப் போட்டியில்

Spartans Batha Vs Shasma

Snipers 1 Vs SATSA

ஆகிய அணிகள் மோதியதில்,

Spartans Batha Vs Snipers 1

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

மிகவும் வலுவான போட்டியாக அமைந்த இறுதிப் போட்டியில், 3–2 என்ற புள்ளி கணக்கின் அடிப்படையில்

*Spartans Batha*  வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக spartans batha அணியை சேர்ந்த திரு. பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்த விளையாட்டுத் திருவிழாவில், கைப்பந்து போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. கவிமணி விளையாட்டுக்குழு தலைவர் திரு.சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏறபாடு செய்ய ஏராளமான தமிழர்கள் குடும்பத்துடன்  பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்போர்ட்ஸ் செண்டர் மற்றும், தோசா கார்னர் ஸ்பான்சராக இருந்து உதவினர்.