ADVERTISEMENT

அமீரகத்தின் வானிலை பாதிப்பு.. இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா..

Published: 19 Dec 2025, 8:11 AM |
Updated: 19 Dec 2025, 8:12 AM |
Posted By: admin

ஷார்ஜா நகர முனிசிபாலிடி, நிலையற்ற வானிலை காரணமாக, எமிரேட் முழுவதும் பொது பார்க்கிங் கட்டணங்களை தற்காலிகமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த விலக்கு, அறிவிப்பு வெளியான நேரத்திலிருந்து உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் டிசம்பர் 19, 2025 வெள்ளிக்கிழமை இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் உள்ள அனைத்து பொது பார்க்கிங் பகுதிகளையும் இது உள்ளடக்கியது, இதில் வாரம் முழுவதும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணம் வசூலிக்கப்படும் பகுதிகள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை, நீல நிற அடையாளங்களால் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த பார்க்கிங் கட்டண விலக்கு ஹேங்கிங் கார்டன்ஸ், அல் ஹெஃபையா ஏரி மற்றும் அல் ரஃபிசா அணை ஆகியவற்றில் உள்ள ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel