ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிரான வானிலை நிலவி வரும் பட்சத்தில் இன்று (சனிக்கிழமை, டிசம்பர் 20) மிகக் குறைந்த வெப்பநிலையாக 3.5°C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
வானிலைத் துறையின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் மலையில் இந்த அளவீடு செய்யப்பட்டது, இது இந்த குளிர்காலத்தில் நாட்டில் இதுவரை பதிவான வெப்பநிலையிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான சிகரமான ஜெபல் ஜெய்ஸ் மலை, கடலோர மற்றும் பாலைவனப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக குளிர்கால மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு குளிரான சூழ்நிலையை அனுபவிப்பதற்காக அறியப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரு நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வந்த நிலையில் இன்று மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியிருக்கின்றது.