உலகெங்கிலும் உள்ள நாடுகள் அனைத்தும் புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கியுள்ள நிலையில், 2026 புத்தாண்டை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் உலக தலைவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், இந்த பண்டிகை நாளில், நாடுகளின் மாண்புமிகு, மேன்மைமிகு மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் இளவரசர்களுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மற்றும் அவர்களின் மக்களுக்கும் நன்மை மற்றும் செழிப்பு ஆகியவை கிடைக்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதே போல் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் இதேபோன்ற வாழ்த்துச் செய்திகளை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்கு அனுப்பி புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
அதே நேரத்தில் துபாயில் உள்ள புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவின் பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி முதல் அபுதாபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ட்ரோன் நிகழ்ச்சிகள் வரை, அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் இந்த நிகழ்வை மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் கொண்டாடி வருகிறார்கள்.
நாடு புத்தாண்டைக் கொண்டுவரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் இந்த நிகழ்வில் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு “நாம் கொண்டாட்டத்தில் ஒன்றுகூடும்போது, அனைவருக்கும் ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் செழிப்பை வளர்ப்பதற்கான முயற்சிகளில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் உறுதியுடன் வரவிருக்கும் ஆண்டை வரவேற்போம்” என்று அவர் கூறியுள்ளார்.
அதே போல் ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் “அமீரகம் எப்போதும் நன்றாக இருக்கட்டும். ஐக்கிய அரபு அமீரகம் எப்போதும் செழிப்பு, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை அனுபவிக்கட்டும். உலகம் எப்போதும் நன்றாக இருந்து நன்மையை நோக்கி நகரட்டும். புத்தாண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இது நமது நாடு அனுபவிக்கும் சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” எனவும் நம்பிக்கையான செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் கூறுகையில், “2026 ஆம் ஆண்டை வரவேற்கும் வேளையில், நம் தலைமைக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு அனைவருக்கும் ஆசீர்வாதங்களையும், செழிப்பையும், அமைதியையும் கொண்டு வர அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். எங்கள் சாதனைகளைக் கட்டியெழுப்பி, வருங்கால சந்ததியினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைக்க நாங்கள் முன்னேறுகிறோம். எங்கள் மதிப்புகளும் ஒற்றுமையும் எங்கள் பெருமையின் ஆதாரமாக இருக்கின்றன, எல்லைகள் இல்லாத லட்சியங்களுடன், நாங்கள் தொடர்ந்து தலைமைத்துவத்தை உருவாக்கி எதிர்காலத்தை கட்டியெழுப்புகிறோம்” என கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel