ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு எக்கச்சக்க தள்ளுபடிகளை வழங்கும் அமீரகம் முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள்..

Published: 31 Jan 2026, 9:51 AM |
Updated: 31 Jan 2026, 9:51 AM |
Posted By: admin

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழமையான நடைமுறையாகும். அதே போல் இந்த வருடமும் தற்பொழுது ரமலான் மாதம் நெருங்கும் நிலையில் அமீரகத்தில் உள்ள விற்பனையாளர்கள் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளனர். அதிலும் 1 திர்ஹம் முதல் பொருட்கள் வாங்கும் அளவிற்கு தங்களது சலுகைகளை அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பிறை பார்ப்பதை பொறுத்து பிப்ரவரி 18 அல்லது 19 அன்று அமீரகத்தில் துவங்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு பேரிச்சம்பழம் மற்றும் பானங்கள் முதல் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் சமையலறை உபகரணங்கள் வரை என மளிகைப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், மின்னணு பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு அமீரகம் முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள் தள்ளுபடிகளை வழங்குகின்றன.

இதில் அபுதாபியை தளமாகக் கொண்ட ADCOOP, ரமலான் 2026 ப்ரோமோஷனிற்காக 20 மில்லியன் திர்ஹம் முதலீட்டை அறிவித்துள்ளது. அவற்றுள் 4,000 க்கும் மேற்பட்ட பொருட்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது மற்றும் 1,500 முக்கிய பொருட்களின் விலைகளைக் குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதே போல் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக அத்தியாவசிய மற்றும் அதிக தேவை உள்ள பொருட்களில் சலுகைகளை வழங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களில் 25 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடியை தங்கள் நிறுவனம் வழங்கும் என்று அல் மாயா சூப்பர் மார்க்கெட்டுகள் தெரிவித்துள்ளது.

ரமலான் தள்ளுபடி பிரச்சாரம், ரமலான் நுகர்வுத் தேவைகளுடன் இணைக்கப்பட்ட முக்கிய FMCG பொருட்கள், உணவுப் பொருட்கள், பானங்கள் மற்றும் தினசரி வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை இது உள்ளடக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் அமீரகத்தின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான noon, மளிகைப் பொருட்கள் மற்றும் ரமலான் அத்தியாவசியப் பொருட்கள் முதல் வீட்டு அலங்காரம், ஃபேஷன் வரை அனைத்து முக்கிய பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகின்றது. அத்துடன் முக்கிய அன்றாட பொருட்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

மேலும் அமீரகத்தில் இயங்கும் விற்பனை நிறுவனமான லுலு, மளிகைப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் உட்பட 5,500 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக லுலுவின் உலகளாவிய செயல்பாட்டு இயக்குனர் சலீம் எம்.ஏ., பிராந்தியம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு வரும் ரமலான் மாதத்தில் மதிப்பு சார்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

அத்துடன் “எங்கள் உலகளாவிய ஆதாரக் குழுக்கள் மற்றும் சப்ளையர் கூட்டாளர்களுடனான ஆரம்பகால திட்டமிடல் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் ஆதரவுடன், ஆயிரக்கணக்கான தயாரிப்புகளில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளுடன் மிகப்பெரிய ரமலான் சலுகைகளை வழங்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம், அதே நேரத்தில் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலையைப் பராமரிக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஜனவரி 27 முதல் பிப்ரவரி 14 வரை பிரபலமான உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளில் மில்லியன் கணக்கான சலுகைகளை ஐக்கிய அரபு அமீரக வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் அமேசான் அறிவித்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் அமீரகம் முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களும் ரமலானை முன்னிட்டு பல சலுகைகளை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.