துபாய் அதிகாரிகள் துபாயின் மிக முக்கிய ஆடம்பர பகுதியான பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒரு சம்பவம் நடந்ததாக உறுதிப்படுத்துகின்றனர். இதனையடுத்து அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அந்த இடம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக துபாய் சிவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்பவும், சமூக ஊடகங்களில் வீடியோக்கள் அல்லது படங்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.