சவூதி அரேபியாவில் இன்று (பிப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை ரமலான் பிறை பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலும் இன்று பிறை தென்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்பதும், நாளை பிப்ரவரி 18-ம் தேதி (புதன்) ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மாதங்கள் பொதுவாக 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். மேலும் ரமலான் மாதம் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ஆகும். இருப்பினும் இது பிறை பார்ப்பதின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும். இந்நிலையில், இன்று பிறை பார்க்கப்பட்டதால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவையே தொடர்ந்து மற்ற வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் நாளை ரமலான் முதல் நாளாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஓமான் பிப்ரவரி 19 ம் தேதி வியாழக்கிழமை ரமலான் முதல் நாள் என ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel