ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏழு நாட்களாக ஈரானின் தாக்குதல் தொடர்ந்து வந்த நிலையில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், ஈரானிய பழிவாங்கும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும், அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அமீரகத்தில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குடியிருப்பாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து அமீரகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குடியிருப்பாளர்களுக்கு ‘எமர்ஜென்சி அலர்ட்’ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ஈரானிய பிரதேசத்தில் ஒரு வாரம் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ தெஹ்ரான் சரணடையாது என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்திருந்தார். மேலும், அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஏவுகணை தாக்குதல் தொடரும் எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel