கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக மத்திய கிழக்கில் போர் நடைபெற்று வரும் நிலையில் தினந்தோறும் ஈரானில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமீரக அதிகாரிகள் வெற்றிகரமாக இடைமறித்து வருகின்றனர். அதில் அவ்வப்போது இடைமறிக்கப்படும் ஏவுகணையின் உடைந்த பாகங்கள் கீழே விழும் பட்சத்தில் சில சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமீரகத்தில் இன்று (சனி) ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபுதாபி – KEZAD கலீஃபா பொருளாதார மண்டலத்தில் (Khalifa Economic Zone Abu Dhabi) சிதறிய பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துக்களில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் காயமடைந்ததாக அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு லேசான காயங்கள் மிதமானவை முதல் மிதமானது வரை ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் அமீரகத்தின் மிகப்பெரிய வர்த்தக, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தொழில்துறை மண்டலமான KEZAD-க்கு அருகே இரண்டு தீ விபத்துகள் ஏற்பட்டதாக அபுதாபி ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த அவசரகாலக் குழுக்களும் சிறப்பு உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.