ADVERTISEMENT

ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் தேதியை அறிவித்த அமீரகம்.!!

Published: 18 Mar 2026, 7:59 PM |
Updated: 18 Mar 2026, 7:59 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவானது குடியிருப்பாளர்களை இன்று மார்ச் 18ம் தேதி பிறை பார்க்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், ஷவ்வால் மாத பிறையானது இன்று தென்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது நாளை மறுநாள் மார்ச் 20ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் நாளை ரமலான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக சவூதி அரேபியாவிலும் பிறை தென்படவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தற்பொழுது அமீரகத்திலும் ஷவ்வால் மாதத்தின் தொடக்கத்தை குறிக்கும் பிறை தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் மார்ச் 20ம் தேதி அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT