ADVERTISEMENT

அமீரகத்தில் 3-வது நாளாக தாக்குதலை நடத்தும் ஈரான்.. அபுதாபி, ராஸ் அல் கைமாவில் விழுந்த சிதறிய பாகங்கள்..

Published: 2 Mar 2026, 2:46 PM |
Updated: 2 Mar 2026, 3:01 PM |
Posted By: admin

ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் மூன்றாவது நாளை எட்டிய நிலையில் அமீரகத்திலும் மூன்றாவது நாளாக ஈரான் தாக்குதலை நடத்தி வருகின்றது. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஈரான் அனுப்பி வரும் ட்ரோன்கள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இன்று அவ்வாறு இடைமறித்ததில் உடைந்த பாகங்கள் அபுதாபியிலும் ராஸ் அல் கைமாவிலும் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள, ICAD -ல் உள்ள ஒரு கிடங்கு மற்றும் முசாஃபா பகுதியில் உள்ள ஒரு வணிக இடத்தின் மீது இவை விழுந்ததாக அபுதாபி அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை மற்றும் சிறிய கட்டிட சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் வான் பாதுகாப்புப் படையினரால் ட்ரோன் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஸ் அல் கைமாவில் உள்ள அல் ஹம்ரா வில்லேஜ் பகுதியில் உடைந்த பாகங்கள் விழுந்ததாக ராஸ் அல் கைமாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத அறிக்கைகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT