ADVERTISEMENT

துபாயில் ‘ஈத் அல் ஃபித்ர்’ சிறப்பு தொழுகைக்காக தயார் நிலையில் 900 மசூதிகள்.!! முன்கூட்டியே வர வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல்.!!

Published: 19 Mar 2026, 7:59 PM |
Updated: 19 Mar 2026, 7:59 PM |
Posted By: admin

இந்த ஆண்டிற்கான புனித ரமலான் மாதம் இன்றுடன் முடிவடையவிருக்கும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நாளை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் அனைத்து முஸ்லிம்களும் காலையில் எழுந்து மசூதிகளிலும், திடல்களிலும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவர்.

ADVERTISEMENT

அவ்வாறு, துபாயில் உள்ள அனைத்து மசூதிகளிலும் நாளை காலை 6:40 மணிக்கு ஈத் அல் ஃபித்ர் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மையம் அறிவித்துள்ளது. மேலும் இதற்காக 900-க்கும் மேற்பட்ட மசூதிகள் முழுமையான தயார்நிலையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘முஅத்தின் அல் ஃபிரீஜ்’ என்ற முன்னெடுப்பின் கீழ் இந்த ஆண்டும் நகரின் மசூதிகள் முழுவதும் ஈத் தக்பீர் ஓதப்பட்டு, தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படும். இது வழிபாட்டாளர்கள் பாதுகாப்பாகவும், ஈத் தொழுகையை அர்த்தமுள்ளதாகவும் கொண்டாட வழிவகுக்கும்.

ADVERTISEMENT

இதனிடையில், தற்போது நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஈத் அல் ஃபித்ர் தொழுகையை மசூதிகளில் மட்டுமே நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது. அத்துடன் தொழுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மசூதிகளில் ஈத் தொழுகையை நிறைவேற்ற அவர்கள் முன்கூட்டியே வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT