ADVERTISEMENT

ஈரான் தாக்குதலுக்குப் பின் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் அறிக்கை..!!

Published: 28 Mar 2026, 8:44 PM |
Updated: 28 Mar 2026, 8:51 PM |
Posted By: admin

ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் குளோபல் அலுமினியத்தின் அல் தவீலா தளம் குறிப்பிடத்தக்க சேதத்தை அடைந்துள்ளது என்று இன்று (மார்ச் 28, 2026, சனிக்கிழமை) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அபுதாபியின் கலீஃபா பொருளாதார மண்டலத்தில் (KEZAD) அமைந்துள்ள அந்தத் தளத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமையன்று, Kezad -ல் வெற்றிகரமாக ஏவுகணை இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மூன்று தீ விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டதாக அபுதாபி ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியது. இதில் ஐந்து இந்தியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் காயமடைந்துள்ளனர்; அவர்களின் காயங்கள் லேசானது முதல் மிதமானது வரை உள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூறுகையில் இந்த சம்பவத்தில் தனது பல ஊழியர்கள் காயமடைந்ததாகவும், ஆனால் அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றும் எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் “எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பும் நலனுமே EGA-வில் எந்நேரமும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும். நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளோம், மேலும் எங்கள் வளாகங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு வருகிறோம்,” என்று EGA-வின் தலைமைச் செயல் அதிகாரி அப்துல்நஸ்ஸர் பின் கல்பன் கூறியுள்ளார்.

EGA-வின் அல் தவீலா உருக்காலை 2025-ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் டன் வார்ப்பு உலோகத்தை உற்பத்தி செய்தது. US, ஈரான் மோதல் தொடங்கிய சமயத்தில், ​​EGA-விடம் கடலில் கணிசமான உலோக இருப்பும், சில வெளிநாட்டு இடங்களில் இருப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT