ADVERTISEMENT

ட்ரோன் இடைமறிப்பு சம்பவம்: ஃபுஜைராவில் ஏற்பட்ட தீ விபத்து..

Published: 14 Mar 2026, 1:33 PM |
Updated: 14 Mar 2026, 1:35 PM |
Posted By: admin

ஃபுஜைராவில் ட்ரோன் இடைமறிப்பு சம்பவத்தின் போது விழுந்த பாகங்கள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக எமிரேட்ஸின் ஊடக அலுவலகம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வான் பாதுகாப்புப் படையினர் ட்ரோனை வெற்றிகரமாக இடைமறித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபுஜைரா சிவில் பாதுகாப்பு குழுக்கள் தற்போது சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மார்ச் 13 நிலவரப்படி, ஈரானிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, அமீரகத்தின் வான் பாதுகாப்பு மொத்தம் 285 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,567 ட்ரோன்கள் ஆகியவற்றை இடைமறித்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT