அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (மார்ச் 12) அதிகாலை 2.45 மணிக்கு ஈரான் தாக்குதலால் தற்பொழுது துபாய் க்ரீக் துறைமுகத்தின் அருகில் ( Dubai’s Creek Harbour) உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ட்ரோன் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து துபாயில் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் துபாய் ஊடக அலுவலகத்தின்படி, கட்டிடத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தற்போது வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட சிறிதளவு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் தற்பொழுது துபாய் க்ரீக் பகுதியிலும் ட்ரோன் விழுந்துள்ளது.