துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகிலுள்ள எரிபொருள் டேங்கர்கள் ஒன்றில் ட்ரோன் சம்பந்தமான தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் சிவில் பாதுகாப்பு குழுக்களால் இந்த தீ விபத்து வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எமிரேட் ஊடக அலுவலகம் திங்கள்கிழமை அதிகாலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தில் விமான சேவைகளை நிறுத்துவது அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் “பயணிகள் தங்கள் விமானங்கள் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.” எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த சம்பவம் காரணமாக நாங்கள் எந்த காயங்களையும் பதிவு செய்யவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் விளைவாக, எமிரேட்ஸ் துபாய்க்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கின்றது., அதே நேரத்தில் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. எனவே, புதுப்பிப்புகள் கிடைக்கும்போது பகிரப்படும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ஆரம்பிக்க மோதலில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் 17வது நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதே போல கடந்த மார்ச் 11 அன்று, துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்தன, ஆனால் அவை சர்வதேச மையத்தில் விமானப் போக்குவரத்தை பாதிக்கவில்லை. இருப்பினும், ட்ரோன்கள் விழுந்ததில் மூன்று பேர், இரண்டு கஹானிய நாட்டவர்கள் மற்றும் ஒரு வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் லேசான காயமடைந்தனர். ஒரு இந்திய நாட்டவரும் மிதமான காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.