ADVERTISEMENT

UAE: அவசரகால எச்சரிக்கையின் போது வீடியோ எடுக்காமல் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்.. எச்சரிக்கும் அதிகாரிகள்..

Published: 4 Mar 2026, 4:14 AM |
Updated: 4 Mar 2026, 4:40 AM |
Posted By: admin

அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி விடுக்கப்படும்போது, ​​தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது வெளியே சென்று வாகனங்களை நிறுத்தி வீடியோ எடுக்கவோ வேண்டாம் என்று எச்சரித்துள்ளது, மேலும் சில பொதுமக்கள் அவ்வாறு செய்து வருவது கவனிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் “உங்கள் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை விடுக்கப்படும் போது வெளியே சென்று படமெடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ வேண்டாம். உடனடியாக ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, அனைத்தும் சீராகும் வரை காத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளது.

அதனுடன், குடியிருப்பாளர்கள் எச்சரிக்கைகள் பெறப்பட்டதும் சிலர் தங்கள் வீடுகளையோ அல்லது வசிக்கும் இடங்களையோ விட்டு வெளியேறுவதை அல்லது அவர்களின் கார்களை நிறுத்தி ஃபோனில் வீடியோக்கள் பதிவு செய்வதை அவதானித்ததாக NCEMA கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது பற்றி கூறுகையில் “உங்கள் பாதுகாப்பிற்காகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று ஆணையம் கூறியதுடன், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, அந்தப் பகுதிக்கு அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அதே போல் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை செய்தி பெற்றால் சம்பவங்களைக் கண்காணிக்க அல்லது பதிவு செய்ய சாலைகளில் நிறுத்துவதற்குப் பதிலாக அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு சென்றவுடன் பாதுகாப்பாக இருக்கவும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அது மட்டுமல்லாமல் “இந்த வழிமுறைகளை மீறுவது உங்களை சட்டப்பூர்வ பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தும்” என்று அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

NCEMA-வின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தஹேரி, “பாதுகாப்பான இடம்” என்றால் என்ன, எச்சரிக்கை வரும்போது குடியிருப்பாளர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதில் பாதுகாப்பான இடம் என்பது, ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளிலிருந்து வீட்டிற்குள் செல்வதை குறிக்கிறது” என்று அவர் விளக்கியுள்ளார்.

“நீங்கள் வீட்டில் இருக்கும் போது எச்சரிக்கை வந்தால், சாத்தியமான உடைந்த பாகங்கள் கீழே விழும் அபாயம் இருப்பதால் அதனை தவிர்க்க, ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலிருந்து விலகி, வீட்டின் உள் பகுதிக்கு அல்லது படிக்கட்டுக்கு அருகிலோ செல்லுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் நீங்கள் வெளியில் இருந்தால், உடனடியாக ஒரு கட்டிடத்திற்குள் நுழைய முயற்சிக்கவும். சத்தம் கேட்குமேயானால் அதனை பின்பற்ற வேண்டாம் அல்லது பார்க்க ஒன்றுகூட வேண்டாம். விலகி இருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றாலும், அன்றாட வாழ்க்கை முடிந்தவரை இயல்பாகத் தொடரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் “இந்த நாட்டில் உள்ள அனைவரும் உறுதியுடனும் வசதியாகவும் இருப்பது எங்களுக்கு முக்கியம். இந்த தாக்குதல் நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடாது,” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 ம் தேதி ஈரான் அமீரகத்தின் மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.