ADVERTISEMENT

அபுதாபி: ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்ததில் இந்தியர் ஒருவருக்கு காயம்..

Published: 23 Mar 2026, 4:55 AM |
Updated: 23 Mar 2026, 4:55 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபுதாபியின் அல் ஷவாமேக் பகுதியில் ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்ததாக அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், அவசரகாலக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்திய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் ஈரான் தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.