ADVERTISEMENT

இந்திய கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை பாதையை அனுமதிக்கிறதா ஈரான்..?? இரு நாட்டு வட்டாரங்களும் தெரிவிப்பது என்ன..??

Published: 12 Mar 2026, 12:26 PM |
Updated: 12 Mar 2026, 1:26 PM |
Posted By: admin

இந்தியாவை சேர்ந்த எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதிப்பதாகவும், ஏனெனில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% இதன் வழியாகவே செல்கிறது என்றும் இன்று (வியாழக்கிழமை) இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நாட்டிற்கு வெளியே உள்ள ஈரானிய வட்டாரம் அத்தகைய ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று மறுத்துள்ளது.

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியமான இந்த கடல் பாதையை திறந்து வைக்கும் நோக்கில், வெளியுறவு அமைச்சர் (EAM) எஸ் ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய பிரதிநிதி அப்பாஸ் அரக்சி இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் இந்தியாவிற்கு பெரும் நிவாரணம் அளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த மறுப்பு ஈரானிய வட்டாரத்திடம் இருந்து வந்துள்ளது.

அதே நேரத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகமும் புதுதில்லியில் உள்ள ஈரானிய தூதரகமும் இந்த கருத்துக்கான கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

மேலும் இந்தியாவை சேர்ந்த “புஷ்பக்” மற்றும் “பரிமல்” ஆகிய இரண்டு இந்திய கொடி கொண்ட கப்பல்கள் இந்த பாதை வழியாக கடந்து செல்ல ஈரான் அனுமதி அளித்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

அதே போல் இன்று மும்பை துறைமுகத்தை இந்திய கப்பல் வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தை அடைந்த கச்சா எண்ணெய் கப்பல் லைபீரிய கொடி கொண்ட டேங்கர் கப்பலாகும். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்கியதிலிருந்து கடல் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ள இந்த நீர்வழிப் பாதையில் பாதுகாப்பாக பயணித்த முதல் இந்திய கப்பல் இதுவாகும். மேலும் அதற்கு தலைமை தாங்கியவர் ஒரு இந்தியர் ஆவார், மேலும் சவுதி துறைமுகமான ராஸ் தனுராவிலிருந்து இந்த கப்பலுக்கு கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் ஈரானிடம் இருந்து இந்தியாவிற்கு அனுமதி அளித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என கூறப்படுகின்றது.

அமெரிக்க,இஸ்ரேல்-ஈரான் இடையே போர் ஆரம்பித்ததன் விளைவாக, ஈரான் உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடுவதாக அறிவித்தது. ஈரானின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த பாதை திறந்திருக்கும் என்றும் மற்ற கப்பல்கள் பாதையை கடக்க முயற்சித்தால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் மேற்கு இந்தியாவில் உள்ள காண்ட்லா துறைமுகத்திற்குச் செல்லும் தாய்லாந்து கப்பல் நேற்று (புதன்கிழமை) இந்த பாதையில் தாக்கப்பட்டது. இது போன்று பிப்ரவரி மாத இறுதியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் அந்நாட்டின் மீது தங்கள் போரைத் தொடங்கியதிலிருந்து ஈரான் இந்த பாதையில் குறைந்தது 16 கப்பல்களைத் தாக்கியுள்ளது. அத்துடன் இந்த பாதிப்பால் எண்ணெய் விலை பீப்பாய்க்கு $200 ஆக உயரக்கூடும் என்றும், இது தற்போதைய அளவை விட இரு மடங்காக உயரக்கூடும் என்றும் தெஹ்ரான் எச்சரித்துள்ளது.

இந்தப் பாதை மூடப்பட்டதால், இந்தியா, ரஷ்யாவிலிருந்து அதிகமாக எண்ணெய் வாங்குவது போன்ற மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.