ADVERTISEMENT

ஈரான் தாக்குதல் எதிரொலி.!! ஈத் அல் ஃபித்ரில் ஒன்று கூடுதல், திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த குவைத்.!!

Published: 12 Mar 2026, 9:22 PM |
Updated: 12 Mar 2026, 9:22 PM |
Posted By: admin

ஈரான் மற்றும் இஸ்ரேல் போரினால் குவைத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, ஈத் அல் பித்ர் பண்டிகையின் போது ஒன்றாக கூடுதல், இசை நிகழ்ச்சிகள், திருமணங்கள் மற்றும் பெரிய கூட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை, குவைத்தின் உள்துறை அமைச்சகம் தற்காலிக தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய பிராந்திய மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட அறிக்கையில், “நாடு மற்றும் பிராந்தியம் எதிர்கொள்ளும் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதன் ஒரு பகுதியாக, சமூகத்தின் பாதுகாப்பையும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கும், தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு அவசரநிலைகளையும் நிவர்த்தி செய்ய தொடர்புடைய அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டத்தில் பொதுமக்கள் ஒன்றாக கூடும் பெரிய கூட்டங்களை கட்டுப்படுத்துவதையும், பாதுகாப்புத் தேவைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து குடியிருப்பாளர்களும் குடிமக்களும் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றவும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பொதுமக்கள் தேசியப் பொறுப்பைக் கடைப்பிடிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு பொது நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை ஈரான் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதில் இடைமறிக்கப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் விழுந்ததால், குவைத்தில் மின் இணைப்பு சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக மின்சார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இதற்கிடையில், குவைத் சர்வதேச விமான நிலையம் பல ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து தெரிவித்துள்ளது. அரசு செய்தி நிறுவனத்தின்படி, இந்த ட்ரோன் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் இல்லாமல், பொருள் சேதம் மட்டுமே பதிவாகியுள்ளது. குவைத் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், சவுதி, கத்தார் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பிற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel